இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர், அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகிய நிகழ்வுகளின் காரணமாக முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலீடுகளை அணுகி வருகின்றனர். இதனால் பங்குச்சந்தை தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரிவுடன் வர்த்தமாகி வருகிறது.
காலை 10:30 மணி நிலவரப்படிமும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 119.14 அல்லது 0.16% புள்ளிகள் உயர்ந்து 80,734.37 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 30.00 அல்லது 1.15% புள்ளிகள் உயர்ந்து 24,574.60 ஆக வர்த்தகமானது.
ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை:
காலை 11.15 மணி நிலவரப்படிமும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 92.08 அல்லது 0.11% புள்ளிகள் சரிந்து 80,517.55 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி -13.90 அல்லது 0.064% புள்ளிகள் சரிந்து 24,518.05 ஆக வர்த்தகமானது.
கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்துடன் வர்த்தகமான பங்குச்சந்தை தொடர்ந்து இந்த வாரமும் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. நாளை (22.07.2024) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் பங்குச்சந்தை புதிய வரலாறு படைப்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்புகள் இடம்பெற்றால் அதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் இருக்கும். கடந்த வாரம் சென்செக்ஸ் 81,800 புள்ளிகளும் நிஃப்டி 24, 500 புள்ளிகளும் முதன்முறையாக கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்திருந்தது. தொடர்ந்து மைக்ரோசப்ட் க்ளவுட் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக 8 மணி நேரத்தில் பங்குச்சந்தை 8 லட்சம் கோடி மதிப்பு இழப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தது. இன்றைய வர்த்தக நேரத்தில் பங்குச்சந்தையில் மாற்றம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
நிஃப்டியை பொறுத்தவரையில் ஐ.டி. துறை பங்குகள் 0.4 சதவீதம் சரிவடைந்துள்ளது. பி.பி.சி.எல்., என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, க்ரேசியம், பவர்கிரிட் ஆகியவை க்ரீனில் வர்த்தகமாகி வருகிறது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் - பங்குச்சந்தை நிலவரம் எப்படி இருக்கும்?
இது தொடர்பாக பங்குச்சந்தை முதலீடு நுட்ப நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில்,” மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்படுவார்கள். லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது ஏனெனில் மத்திய பட்ஜெட்டில் நேர்மறையான திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. லான் டர்ம் கேபிடல் கெயின்ஸ் டாக்ஸேசன், மற்றும் நடுத்தவரர்த்த நபர்களுக்கான வருமான வரியில் தளர்வு ஆகிய இரண்டிலும் எதிர்மறையான அறிவிப்புகள் ஏற்படும் எனில் அது பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட காரணமாக அமையும். அதே வேளையில் பட்ஜெட் நல்ல அறிவிப்புகள் இருந்தால் அது பங்குச்சந்தை வரலாற்றில் புதிய உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்தார்.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:
பி.பி.சி.எல்., என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, க்ரேசியம்,பவர்கிரிட் கார்ப், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், எம்& எம், இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், சிப்ளா, கோல் இந்தியா, ஹிண்டால்கோ, டாடா மோட்டர்ஸ், டாடா கான்ஸ் ப்ராட், ஹீரோ மோட்டர்கார்ப், ஓ.என்.ஜி.சி., சன் பார்மா, ஸ்ரீராம் ஃபினான்ஸ், டிவிஸ் லேப்ஸ், மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், லார்சன், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், அப்பல்லோ மருத்துவமனை, அதானி எண்டர்பிரைசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, ஜெ.எஸ்.டபுள்யு, ஸ்டீல், டைட்டன் கம்பெனி, பிரிட்டானியா, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
விப்ரோ, ரிலையன்ஸ், கோடாக் மஹிந்திரா, ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., எல்.டி.ஐ. மைண்ட்ரீ, இந்தஸ்லேண்ட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், நெஸ்லே, அதானி போர்ட்ஸ், டி.சி.எஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.