சீர்காழியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த வேகத்தடைக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளை நிற வண்ணம் பூசியுள்ளனர்‌. நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாறி தற்போது தமிழக வெற்றிக் கழகமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் ஆரம்ப காலம் முதல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.


ABP -CVoter Opinion Poll: மக்களவைத் தேர்தலில் முக்கிய மாநிலங்களின் சூழல் யாருக்கு சாதகம்? - ஏபிபி கருத்துக் கணிப்பு முடிவுகள் இதோ..!




பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்யும் தவெக:


குறிப்பாக கொரோனா காலகட்டத்திலும், அதனைத் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு, முடி திருத்துதல், பேருந்து வசதி, அரசு மருத்துவமனையில் இருந்து செல்லும் பிரசவித்த தாய்மார்களுக்கு வாகன வசதி, பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு, எழுது பொருட்கள் என ஏராளமான நலத்திட்ட உதவிகளை கட்சி துவங்குவதற்கும் பல முன்பிருந்த ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.


TN CM MK Stalin: தமிழ்நாடு வளர்வதை பொறுக்க முடியவில்லை; அதனால்தான் இந்த வேலை - பொங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்




மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றம்:


மேலும் தற்போது கட்சி தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் அங்காங்கே மக்கள் மூலம் எழுப்பப்படும் கோரிக்கைகளையும் அவர்களால் முடிந்தளவு செய்து வருகின்றனர். கடந்த மாதம் அரசு பள்ளி ஒன்றின் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளியின் கரும் பலகையை பச்சை நிறத்தில் மாற்றி தந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைத்து விபத்தை தடுக்க வகையில் நான்கு புறமும் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் இல்லாத நிலையில், வேகத்தை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் வேகமாக அதனை கடந்து விபத்து ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் வேகத்தடையில் வெள்ளை நிற வண்ணம் பூசி விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.


Lok Sabha Elections 2024 TN: தொகுதிப் பங்கீடு ஓவர் - இவங்க 3 பேர் மட்டும் வேணாம்! - காங்கிரஸ்க்கு லிஸ்ட் போட்ட திமுக?




ஆனால் இவர்களின் கோரிக்கைக்கு நெடுஞ்சாலை துறையினர் செவி சாய்க்காத நிலையில், இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தினர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குட்டிகோபி அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தொண்டரணி தலைவர் தினேஷ், மாவட்ட துணை செயலாளர் தீபன் பொறுப்பாளர் ராகுல் சீர்காழி ஒன்றிய தலைவர் கமல் கொள்ளிடம் ஒன்றிய தலைவர் ரவி சீர்காழி ஒன்றிய செயலாளர் மகேஷ்  நகர பொருளாளர் அபி சீர்காழி ஒன்றிய மாணவரணி செயலாளர் அன்பு  செங்கமேடு மணி மற்றும் அக்கட்சியினர் சென்று வேகத்தடைக்கு வெள்ளை நிற வண்ணம் பூசி விபத்துக்களை தடுக்கும் வண்ணம் செயல்பட்டுள்ளனர். மேலும் இவர்களின் இந்த செயல் அப்பகுதி பொதுமக்கள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.


TN CM MK Stalin: அண்டப்புளுகு ஆகாசப்புளுகு; இது மோடி புளுகு: வச்சி செய்த முதலமைச்சர் ஸ்டாலின்