பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். 


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் நலத்திட்ட உதவிகளை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.


சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் புறப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்றடைந்தார். பின்னர் சாலை மார்கமாக 10.45 மணிக்கு நலத்திட்ட உதவிகள வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.


இந்த விழாவில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கும்,  கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 509 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் 416 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார். 


பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் "தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு துணிவோடு வந்திருக்கிறேன். மக்களிடம் மகிழ்ச்சியை காணும் போது எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. கலைஞர் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.  பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப்பட்டு வருகிறது. மக்களின் கோரிக்கைகளை கருத்துக்களை காது கொடுத்து கேட்கும் முதலமைச்சர் ஆக செயல்படுகிறேன். இதனை கொச்சை படுத்தும் வகையில் சிலர் நடந்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு தக்க பதிலளிக்கும் காலம் வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.