சீர்காழி அருகே பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய காவலர் மீது லாரி மோதியதில் காவலர் சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


முதல்நிலை காவலர்


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் 39 வயதான காளிதாஸ். இவர் மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு தடுப்பு பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மயிலாடுதுறையில் பணி முடிந்து இரவு சிதம்பரத்தில் உள்ள தனது வீட்டிற்கு காளிதாஸ் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது சீர்காழி சிதம்பரம் இடையே உள்ள ஆனந்த கூத்தன் என்ற இடத்தில் நான்கு வழிச்சாலையில் சென்ற போது சிதம்பரத்தில் இருந்து சீர்காழி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த காளிதாசன் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.


Watch Video: கோலியின் உணவகத்திற்கு சென்ற விராஜ் தோலி..குழம்பிய ரசிகர்கள்! வைரல் வீடியோ




லாரி ஓட்டுனர் கைது


இதனை அடுத்து தகவல் அறிந்த ஆணைக்காரன் சந்திரம் காவலநிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து உயிரிழந்த காளிதாஸ் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரான காட்டுமன்னார்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரை கைது செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். உயிரிழந்த காளிதாசுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. 


Thalapathy 69: நடிகர் விஜய்யின் கடைசி படம்! தளபதி 69 அரசியல் படமா? மனம் திறந்த எச்.வினோத்!




பொதுமக்கள் கோரிக்கை 


சீர்காழி புறவழிச்சாலையில் போதிய முன்னறிவிப்பு பலகை இல்லாமல் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருவதால் சாலை விபத்துகள் தொடர்வதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சீர்காழி பகுதியில் லாரி மோதி காவலர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கப்பலூர் டோல்கேட்டை இடமாற்ற கோரி 15க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்