மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கூழையார் கிராமத்தில் வனத்துறை சார்பில் 24 இலட்சத்து 900 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கபட்டுள்ள மரகத பூஞ்சோலை பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.


மரகத பூஞ்சோலை


மரகத பூஞ்சோலையானது, வன வளங்கல் மீதான மானுடவியல் அழுத்தத்தைக் குறைப்பதுடன், நீர் நிலைகளை மேம்படுத்தி சூழலியல் சேவைகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. பசுமையான பூங்காங்களை உருவாக்குவதன் மூலம் மக்களை இயற்கைக்கு நெருக்கமாக கொண்டு வருவது இத்திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, வேட்டங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  கூழையார் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு பகுதியாக மரகத பூஞ்சோலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  


'இனி எங்க ஊரும் தலைநிமிரும்' ... மகிழ்ச்சியில் அரூர் மக்கள் - காரணம் என்ன?




1 ஹெக்டேர் பரப்பளவு


இத்திட்டத்தின் கீழ் 1 ஹெக்டேர் பரப்பளவில் கூழையார் கடற்கரை பகுதியில் 24 இலட்சத்து 900 ரூபாய் மதிப்பீட்டில் மரகத பூஞ்சோலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் நாட்டு மரங்களை பாதுகாக்கும் நோக்கில் தடிமரத்தோட்டம், பூக்கும் மரங்கள் தோட்டம், பழவகை மரங்கள் தோட்டம், அழகிய நுழைவு வாயில், பார்வையாளர்கள் ஓய்வுக்கூடம், நடைப்பாதைகள், கடல் ஆமையின் வாழ்க்கை முறையை குறிக்கும் வண்ணப்பலகைகள் ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன.  இப்பூங்காவினை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். 


பரதநாட்டியத்தில் அசத்திய சீன சிறுமி.. 13 வயதில் அரங்கேற்றம் செய்து சாதனை.. செம்ம!




இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன்  கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில், கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப் கான், சீர்காழி வன அலுவலர் குமரவேல், சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், வேட்டங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் எழிலரசி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சுதந்திர தின விழா ஜனாதிபதி விருந்தில் பங்கேற்கும் மரம் யோகநாதன் - எதற்காக தெரியுமா?