விராட் கோலி தோற்றம் கொண்ட நபர்:
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரவீரர் விராட் கோலி. உலகில் உள்ள விராட் கோலியின் கோடிக்கனக்கான ரசிகர்களின் ஒரே ஆசை எப்படியாவது அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்பது தான். இச்சூழலில் தான் வித்தியாசமான சம்பவம் ஒன்று அவரது உணவகத்தில் நடைபெற்றுள்ளது. அதாவது விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் உணவகத்தில் அவரை போலவே தோற்றம் உடைய ஒருவர் வந்திருக்கிறார்.
இதனைக்கண்ட ரசிகர்கள் விராட் கோலிதான் வந்திருக்கிறார் என்று நினைத்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் கடைசியில் தான் தெரிந்தது அவர் விராட் கோலி இல்லை என்பது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஜாலியாக இருக்கும் விராட் கோலி:
இதற்கிடையில், விராட் கோலி தற்போது தனது குடும்பத்தினருடன் ஜாலியாக சுற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் விராட் கோலி பங்கேற்றார். செப்டம்பர் 19 வரை இந்தியாவுக்கான சர்வதேச தொடர் எதுவும் இல்லை அதேபோல் துலீப் டிராபி அணியில் கோலி இடம் பெறாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.