Thalapathy 69: நடிகர் விஜய்யின் கடைசி படம்! தளபதி 69 அரசியல் படமா? மனம் திறந்த எச்.வினோத்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள அவரது கடைசி படம் அரசியல் படமா? இல்லையா? என்பது குறித்து இயக்குனர் எச்.வினோத் பதில் அளித்துள்ளார்.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு அவர் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பதாக அறிவிப்பை வௌியிட்டார்.

Continues below advertisement

தளபதி 69:

அவரது நடிப்பில் அவருடைய 68வது படமான தி கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து, அவருடைய கடைசி படமாக தளபதி 69 உருவாக உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளார்.

இந்த நிலையில், எச். வினோத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில், அவர் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் குறித்து பேசியுள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். இதனால், அது அரசியல் சார்ந்த படமாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

அரசியல் படமா?

அதற்கு பதிலளித்து பேசிய எச்.வினோத், இல்லை. இது 200 சதவீதம் தளபதி படம். பக்கா கமர்ஷியல் படம். இந்த படத்தை அனைத்து வயதினரும் பார்க்கும் படமாக இருக்கும். அனைத்து கட்சியினரும் பார்க்கும் படம். எல்லாரும் பார்க்கும் படமாக இருக்கும். ஒரு அரசியல் கட்சியையோ, அரசியல்வாதியையோ தாக்கும் படமாகவோ இல்லாமல் அனைவரும் பார்க்கும் படமாக இருக்கும் என்று கூறினார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சதுரங்க வேட்டை என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த இயக்குனர் எச்.வினோத், பின்னர் தீரன் படத்தை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். பின்னர், அஜித்தை வைத்து அவர் இயக்கிய வலிமை படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

என்ன செய்யப்போகிறார் எச்.வினோத்?

பல தடங்களால் வலிமை படம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவான துணிவு படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இதையடுத்து, எச்.வினோத் தற்போது விஜய் படத்தை இயக்க உள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை நெகட்டிவ் கதாபாத்திர ஹீரோ வழி கதை சொல்வதில் தேர்ந்தவரான எச்.வினோத் படத்தில் நடிகர் விஜய்யையும் அதேபோல எதிர்பார்க்கலாமா? அல்லது தீரன் பட கார்த்தி பாணியில் நேர்மையான நபராக காட்டப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola