Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (30.09.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பராமரிப்பு பணிகள்
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய சீர்காழி கோட்ட உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் எதிர்வரும் 30.09.2024 திங்கட்கிழமை அன்று 33/11 KV எடமணல் துணைமின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் பருவ கால முன்னெச்சரிக்கை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மேற்படி துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
திட்டை, செம்மங்குடி, கடவாசல், எடமணல், திருகருக்காவூர், திருமுல்லைவாசல், வேட்டங்குடி, தில்லைவிடங்கன், கூழையார், தொடுவாய் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
அதேபோன்று தமிழ்நாடு மின் வாரிய சீர்காழி கோட்ட உதவி செயற்பொறியாளர் ராஜா விடுத்துள்ள செய்தி குறிப்பில் சீர்காழி கோட்டத்தில் எதிர்வரும் 30.09.2024 திங்கட்கிழமை அன்று அரசூர் மற்றும் ஆச்சாள்புரம் பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மேற்படி துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளான அரசூர், ஆச்சாள்புரம், மாங்கணாம்பட்டு, புத்துார், எருக்கூர், மாதிரிவேளுர், வடரங்கம், அகணி, குன்னம், கொள்ளிடம், ஆணைகாரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார், புதுப்பட்டிணம், மாதானம், பழையபாளையம், பச்சைபெருமாநல்லூர், சீயாளம், கொண்டல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.