IPL Player Retain Rule: ஐபிஎல் 2025 தொடருக்காக ஒவ்வொரு அணியும், ஒரு அன்-கேப்ட் பிளேயர் உட்பட 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


ஐபிஎல் - வீரர்களை தக்கவைப்பதற்கான விதிகள்:


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் தக்கவைப்பு விதிகளை அறிவித்தது. அதன்படி, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணி உரிமையாளர்கள்,  தங்கள் அணியிலிருந்து விடுவிக்க உள்ள மற்றும் தக்கவைக்க உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது.  மெகா ஏலத்திற்கு முன்னதா,  நேரடித் தக்கவைத்தல் அல்லது ரைட்-டு-மேட்ச் கார்டு மூலம் அதிகபட்சமாக, ஒவ்வொரு அணியும் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


தக்கவைப்பு வீரர்களுக்கான ஊதியம்:


ஒரு அணி நிர்வாகம் ஐந்து வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், முதல் மூன்று வீரர்களுக்கு முறையே ரூ. 18 கோடி, ரூ. 14 கோடி மற்றும் ரூ. 11 கோடி செலவாகும். அடுத்த இரண்டு விரர்களுக்கு ரூ.18 கோடி மற்றும் ரூ.14 கோடியை இழக்க நேரிடும். அதன்படி, ஐந்து வீரர்களைத் தக்கவைத்தால், ஒரு அணி ஏலத்தின் போது ரூ.45 கோடியை மட்டுமே கைவசம் வைத்திருக்கும். எனவே, அனைத்து அணிகளும் 6 வீரர்களை தக்கவைப்பது என்பது சந்தேகம் தான். இருப்பினும் ஒவ்வொரு அணியும், தக்கவைக்க வாய்ப்புள்ள 6 வீரர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


தக்கவைக்கப்பட வாய்ப்புள்ள வீரர்கள் விவரம்:


சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் , ரவீந்திர ஜடேஜா , ஷிவம் துபே, டேரில் மிட்செல், மதீஷா பத்திரனா, எம்எஸ் தோனி


மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், அன்ஷுல் கம்போஜ் 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, முகமது சிராஜ், வில் ஜாக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், யாஷ் தயாள் 


ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர் , ரிங்கு சிங் , பில் சால்ட் , சுனில் நரைன் , ஆண்ட்ரே ரசல் , ஹர்ஷித் ராணா 


குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில், ரஷித் கான், டேவிட் மில்லர், சாய் சுதர்சன், முகமது ஷமி, ராகுல் திவேதியா


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல், குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரான், ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டோனிஸ், மயங்க் யாதவ்


டெல்லி கேபிடல்ஸ்: ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மிட்செல் மார்ஷ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அக்சர் படேல், அபிஷேக் போரல் 


பஞ்சாப் கிங்ஸ்: சாம் கரன், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் ஷர்மா 


சன்ரைசர்ஸ் ஐதராபாத்: பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், நடராஜன், நிதிஷ் குமார் ரெட்டி