சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உத்தரவுபடி விடுதலை சிறுத்தை கட்சி வணிகர் அணி மாநில துணை செயலாளர் விஜயரங்கன் தலைமையில் பொதுமக்களுக்கு இலவசமாக ஆயிரம் நாள்காட்டிகள் வழங்கினார். புத்தாண்டு என்றால் முன்னதாக நினைவிற்கு வருவது. காலண்டர்கள் தான் கலர் கலராக, கடவுள் படங்கள், கட்சி தலைவர்கள் படம்கள், சினிமா நடிகர்கள் படங்கள் என வித விதமாக கடைகளில் வாயில் தொங்கவிட்டு விற்பனை களைக்கட்டும். பின்னர் அக்கம் பக்கம் உள்ள கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக காலண்டர் வழங்குவதும் வழக்கம்.
தற்போது காலமாற்றம் காரணமாக பல தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நிலையில் பலரும் தங்கள் கைபேசியில் காலண்டர், கால்குலேட்டர், கடிகாரம் என அனைத்தையும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இருந்த போதும் கடைகளில் விற்பனையாகும் காலண்டர்களின் விற்பனை குறைந்தாலும், காலண்டர் பயன்பாடு குறைவில்லை. குறிப்பாக இந்துக்களின் வழிபாட்டு நம்பிக்கைகளின் படி எந்த ஒரு சுப காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் நல்ல நாள், நேரம் பார்த்து தான் துவங்குவது வழக்கம். நல்ல நாளில் துவங்கப்படும் காரியங்கள் சுபமாகவும், மங்கலகரமாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை. அதனை பெரும்பாலும் பஞ்சாங்கத்தில் பார்ப்பவர்களை விட காலண்டரில் பார்பவர்கள்தான் அதிகம்.
OPS Speech: அதிமுக சட்ட விதிகளை காலில் போட்டு மிதிக்கின்ற செயலை செய்தவர் இபிஎஸ் - ஓபிஎஸ் காட்டம்
அதனால் காலண்டர் அனைத்து வீடுகள், கடைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் நிச்சயம் அங்கம் வகிக்கும். மேலும் தற்போது உள்ள விளம்பர உலகில் தங்கள் விளம்பரங்களை ஆண்டு முழுவதும் வெளிப்படுத்தும், தினம்தோறும் காணும் ஒன்றாக காலண்டர்கள் இருப்பதால், அரசியல் கட்சியினர் மற்றும் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை இதன்மூலம் அதிகளவில் வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி பொதுமக்களுக்கு நாள்காட்டியின் முக்கியத்துவம் அறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் உத்தரவுபடி வருகின்ற 2024 -ஆம் ஆண்டிற்கான புதிய நாட்காட்டிகளை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டில் தோட்ட மானியம், புளிச்சக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி வணிகர் அணி மாநில துணை செயலாளர் விஜயரங்கன் தலைமையில் அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், வணிக நிறுவனங்களுக்கும் ஆயிரம் நாள்காட்டிகளை மாவட்ட முழுவதும் இலவசமாக வழங்கினார். இதில் வணிகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அமைப்பாளர் சிறுத்தை சிவா, தொகுதி செயலாளர்கள் வைத்தியநாதன், திட்டை பாரதி, சந்திரன், தர்மராஜ், அரவிந்த், விஜய் பாஸ்கரன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் பலரும் காலண்டரை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.