Vijayakanth Death: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடையடைப்பு; விஜயகாந்துக்கு வணிகர்கள் இரங்கல்

மயிலாடுதுறையில் வணிகர்கள் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 12 மணி வரை கடையடைப்பு செய்வதாக அறிவித்தனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி வணிகர்கள் 2 மணிநேரம் கடைகளை அடைத்து இரங்கல் தெரிவித்துள்ளனர். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 28) காலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவு மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எவராலும் வெறுக்க முடியாத நபராக அனைவராலும் அன்போடு ’கேப்டன்’ என அழைக்கப்பட்ட விஜயகாந்த் மறைவுக்கு கட்சி, சினிமாவில் விருப்பு, வெறுப்பின்றி அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Continues below advertisement

vijaykanth Death: கோயம்பேட்டில் நடிகர் விஜய்க்கு எதிர்ப்பா? விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தியபோது ரசிகர்கள் செய்தது என்ன?


மேலும், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருவதால் தீவுத்திடல் முழுக்க மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. மேலும், 2வது நாளாக லட்சகணக்கானோர் தொடர்ந்து அவரின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோன்று தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி வரை விஜயகாந்த் மறைவிற்கு அவரின் புகைப்படங்களை வைத்து பலராலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வணிகர்கள் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 12 மணி வரை கடையடைப்பு செய்வதாக அறிவித்தனர்.

Vijayakanth Traffic: தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் - சென்னை போக்குவரத்தில் இன்றைய முக்கிய மாற்றங்கள்


அதனை அடுத்து இன்று அவர்கள் கடைகளை அடைத்து இரங்கலை வெளிப்படுத்தி உள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு பகுதியில் காலை 12 மணிவரை இரண்டு மணிநேரம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சீர்காழியில் இரண்டு மணி நேரம் என அறிவித்து காலை 11 மணி வரை கடையப்பு செய்துள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் செம்பனார்கோவில் ஆக்கூர், திருக்கடையூர், தரங்கம்பாடி, பொறையார் பகுதிகளில் மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை கடையடைப்பு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijayakanth Death: “சொர்க்கம் என்ற ஒன்று இருந்தால் உங்களுக்காக ஒரு மாளிகை திறந்திருக்கும்” - விஜயகாந்த் குறித்த மிஷ்கின்

Continues below advertisement