சீர்காழி அருகே ஈசானி தெருவில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையின் உள்ளே ஐந்தடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்ததால் அடுத்து கடை ஊழியர்கள் கடைவிட்டு வெளியேறியுள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் காவிரி கடைமடை மாவட்டமாக திகழ்ந்து வரும். இதன்காரணமாக இம்மாவட்டம் முழுவதும் பெருமளவு விவசாய பிரதான தொழிலாக இருந்து வருகிறது. வயலும் வயல் சார்ந்த இடமும் என்பதால் இந்த மாவட்டத்தில் அதிகளவில் பாம்புகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இதன் காரணமாக அவ்வபோது வீடுகள், கடைகள், அலுவலகங்கள், கார், பைக் போன்ற வாகனங்கள் என மக்களை அச்சுறுத்தும் விதமாக பாம்பு நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் பலரை பாம்புகள் கடித்து உயிரிழந்த சம்பவங்களும் நடந்தேறி வருகிறது.


ஈசானி தெரு டாஸ்மாக் கடை 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஈசானி தெருவில் அமைந்துள்ளது அரசு மதுபான கடையான டாஸ்மாக். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மது பிரியர்கள் வந்து மதுபானம் வாங்கி செல்கின்றனர். மேலும் பலர் கடையின் அருகிலேயே அமர்ந்து குடித்து வருகின்றனர்.


Vijay Birthday: “விஜய்க்கு அறிவுரை சொல்லும் இடத்தில் நான் இல்லை” - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!




டாஸ்மாக் உள்ளே புகுந்த பாம்பு 


இந்நிலையில் நேற்று மாலை கடையின் உள்ளே மதுபான பெட்டிகளுக்கும் இடையே உஷ் உஷ் என சத்தம் வந்துள்ளது. அந்த சத்தத்தை கேட்ட மதுகடை ஊழியர்கள் என்ன சத்தம் என ஊற்று பார்த்துள்ளனர் அப்போது சுமார் ஐந்தடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று மதுபான பெட்டிகளுக்கு இடையே நெலிந்து உள்ளது. 


Rear Wheel Drive Cars: இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ரியர் வீல் டிரைவ் கார்கள் - டாப் 6 லிஸ்ட் இதோ..!




டாஸ்மாக் கடைக்குள் நுழைந்த பாம்பு பிடிவீரர் 


அதனை கண்டு அச்சமடைந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் உடனடியாக சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிவீரரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்து அவரை வரவழைத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பாம்பு பிடிவீரர் பாம்பு பாண்டியன் கடைக்குள் மதுபான பெட்டிகளுக்கு இடையே இருந்த பாம்பினை லாவகமாக பிடித்து பத்திரமாக கொண்டு வனப்பகுதியில் விட்டார்.


Vijay Birthday: விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!