மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த கட்டிட நிகழ்ச்சியின்போது விழா மேடையில் காலியாக இருந்ததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் 26 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம், கடல் அரிப்பை தடுக்கும் விதமாக கருங்கல் கொட்டும் பணி, மீன்பிடி இறங்கு தளம், மீன் விற்பனை கூடங்கள் என அரசு சார்பில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட வாணகிரி மீனவ கிராமத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம் மற்றும் சின்னமேடு மீனவ கிராமத்தில் 9.78 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கடல் அரிப்பை தடுக்கும் வகையில் நேர்கல் தடுப்புசுவர் மற்றும் மீன் ஏலக்கூடத்தையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.‌க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக ஒரே நேரத்தில் தொடங்கி வைத்தார்.


UGC NET Answer Key: 9.45 லட்சம் பேர் எழுதிய யுஜிசி நெட் தேர்வு; விடைத்தாள் வெளியீடு- ஆட்சேபிப்பது எப்படி?




சின்னமேடு பகுதியில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் முதலமைச்சரின் காணொளி திறப்பு விழா நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரலையில் காணும் வகையில் இரண்டு எல்இடி திரை வைக்கப்பட்டு விழா மேடையில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வாணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 


Mayiladuthurai: 33 ரூபாய் கரும்பு 15 ரூபாய்க்கு கொள்முதல் - மயிலாடுதுறை மாவட்டம் விவசாயிகள் வேதனை




இதனால் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து போது சின்னமேடு மீனவ கிராமத்திற்கு ஒருவரும் வராததால் விழா மேடை நாற்காலிகள் காலியாக இருந்தது. தொடர்ந்து வாணகிரி மீனவர் கிராமத்தில் காணொளி காட்சி நிகழ்ச்சியை முடித்துவிட்டு சின்னங்குடி மீனவ கிராமத்திற்கு சுமார் 12 மணியளவில் வந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா. முருகன் மற்றும் மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி மீன் ஏலக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தனர். தொடர்ந்து மீனவ பஞ்சாயத்தார்கள் நேர்கல் தடுப்புசுவரின் நீளத்தை அதிகப்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செய்துதர கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். 


Palani murugan temple: பழனி கோயிலுக்கு நாதஸ்வரம், தவில் வாசித்து செல்ல தடை...பக்தர்கள் வாக்குவாதம்






நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறாமல் தாமதமாக நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாகவே வந்து காத்திருந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசிரேகா ரமேஷ் சிறப்புரையாற்ற அழைக்காததால் மீன்வளத்துறை அதிகாரியிடம் நிகழ்ச்சி முறையாக நடைபெறவில்லை என்ற கேள்வி எழுப்பினர். அவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மீனவளத்துறை அதிகாரி இளம்வழுதி செய்தியாளர்கள் இதனை பதிவு செய்வதை அறிந்து இது குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம் என கூறி அங்கி நலுவி சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.


ICC Test Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்... இந்திய வீரர் விராட் கோலிக்கு எத்தனையாவது இடம்! விவரம் உள்ளே!