ஐசிசி டெஸ்ட் தரவரிசை:


ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு இடையே தரவரிசை பட்டியலை வெளியிடும். அந்த வகையில் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்ட சூழலில் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியில் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்த சீசனில் டெஸ்ட் போட்டிகள் நிறைய நடைபெற்று வரும் சூழலில், தற்போது இந்த பட்டியல் வெளியாகியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


டாப் 10 வீரர்கள்:


அந்த வகையில் இந்த தரவரிசை பட்டியலில் டாப் 10 வீரர்களில் ஒரே ஒரு இந்திய வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மட்டும் தான் இடம் பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். இச்சூழலில், தற்போது 761 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். 


அதேபோல், இந்த பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் 859 புள்ளிகளை பெற்று  முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்  859 புள்ளிகளை பெற்றுள்ளார். அதேபோல், 3 வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவென் ஸ்மித் 820 புள்ளிகளை பெற்றிருக்கிறார்.


நான்காவது இடத்தில் மற்றொரு நியூசிலாந்து அணி வீரரான டெரில் மிட்செல் 786 புள்ளிகளுடன் இருக்கிறார். 5 வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவுஜா 785 புள்ளிகள் எடுத்திருக்கிறார். ஆறவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் 782 புள்ளிகளுடன் இருக்கிறார். அதேபோல், 7வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் 
Marnus LABUSCHAGNE 777 புள்ளிகளுடன் இருக்கிறார்.


9 வது இடத்தில் விராட் கோலி:


8 வது இடத்தில் இங்கிலாந்து அணி ஹேரி ப்ரூக் 773 புள்ளிகளுடனும், ஒன்பதாவது இடத்தில் இந்திய அணி வீரர் விராட் கோலி 761 புள்ளிகளுடம் உள்ளார். மேலும், 10 வது இடத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் ட்ராவிஸ் ஹெட் 754 புள்ளிகளுடன் இருக்கிறார்.


அதே போன்று டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல், ரவீந்திர ஜடேஜா நான்காவது இடத்திலும், பும்ரா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர்களின் வரிசையில் இந்திய வீரர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் இரண்டு இடங்களில் தொடர்கின்றனர். அதேபோல், தென்னாப்பிரிக்க வீரரான மார்கோ யான்சன் ஐந்து இடங்கள் முன்னேறி முதல் முறையாக எட்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: Markram Century: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்... மளமளவென சதம் அடித்த ஐடன் மார்க்ரம்!


 


மேலும் படிக்க: Virender Sehwag: ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர்: சேவாக் வைத்த முக்கிய கோரிக்கை!