இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 19 -ஆம் தேதி வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிமுறையில் அமலுக்கு வந்தன. அதன்படி மயிலாடுதுறை மற்றும் சீர்காழி,  பூம்புகார் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் மாவட்ட முழுவதும் ஆங்காங்கே பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அதிகாரிகள் அகற்றினர். 


ID Proof: தேர்தல் அறிவிச்சாச்சு; வாக்களிக்க தகுதியுள்ள 12 ஆவணங்கள் எதுவெல்லாம் தெரியுமா?




இதனிடையே மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் போட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்  ராஜகுமார் தனது பிறந்தநாள் விழா அலுவலகத்தின் வாயிலில் கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பூட்டி சீல் வைக்கப்பட்ட அலுவலக வளாகத்தில் சாமியான பந்தல் அமைத்தும், சட்டமன்ற வளாகத்தின் பின்புறம் பெரிய அளவில் டைனிங் டேபிள்கள் போடப்பட்டு பிரியாணி விருந்து கொடுத்து, கேக் வெட்டி தனது பிறந்த நாளை எம்எல்ஏ ராஜ்குமார் கொண்டாடினார்.


Lok Sabha Election: 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு பெறும் தே.மு.தி.க.! மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியா?




அதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக கூட்டம் கூட்டமாக நிர்வாகிகள் அலுவலகத்தில் குவிந்து எம்எல்ஏவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஒருபுறம் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அலுவலகத்தின் பின்னால் தடபுடலாக விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில் அதனை மீறும் விதமாக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பூட்டி சீல் வைக்கப்பட்ட தனது அலுவலகத்தின் வாயிலேயே பிறந்த நாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இது தொடர்பான வீடியோ மற்றும் ஃபோட்டோகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.


Lok sabha Election 2024: இன்னும் ஒரு மாசம்தான்! தொடர் இழுபறியில் அ.தி.மு.க. கூட்டணி - என்ன நடக்கிறது?




இந்நிலையில் இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல்துறையினர் சட்டமன்ற அலுவலகத்தில் சட்டவிரோதமாக கூடி அத்துமீறி உள்ளே நுழைந்து தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடியது உள்ளிட்ட 3  பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் - எப்படி நடைபெறும்? விதிகளும், நடைமுறைகளும் என்ன?