மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு அப்பள்ளியில் பணிபுரியக்கூடிய மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த 57 வயதான நாராயண பிரசாத் என்கின்ற ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
Crime: தஞ்சையில் 19 வயது இளம்பெண் பலி - போதையில் தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்
இதுதொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் இளவரசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆசிரியர் நாராயண பிரசாத் 2020ம் ஆண்டு கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நாகப்பட்டினம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நிறைவுற்றது. இதில் ஆசிரியர் நாராயண பிரசாத் மீதான குற்றச்சாட்டு நிரூப்பிக்கப்பட்டதை அடுத்து அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணன் குற்றவாளி நாராயண பிரசாத்துக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து குற்றவாளி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கனிமொழி ஆஜராகி வாதாடினார். வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகவள்ளியும், நீதிமன்ற அலுவலில் பெண் தலைமை காவலர் வாலண்டினாவும் செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க உதயாக இருந்துள்ளனர்.
Crime: திருமணத்தை மீறிய உறவு.. மனைவி, 2 மகன்களை வீட்டை விட்டு விரட்டிய முன்னாள் ராணுவ வீரர்