சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் மழை பெய்யும் நேரங்களில் மருத்துவனையின் உள்ளே மழை பெய்வதுடன் மழைநீரும் தேங்குவதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டமாக பிரிக்கப்பட்டது அடுத்து சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை பெயரளவில் மட்டுமே தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகின்றது. மேலும் தொடர்ச்சியாக இங்கு மருத்துவர், செவிலியர்கள், டெக்னிஷியன்கள் பற்றாக்குறை, கட்டங்கள் பிரச்சினை என பல பிரச்சினைகள் நிலவி வருகிறது. இது குறித்து பலமுறை பல்வேறு ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி இருக்கின்றன.
ஏழை எளிய மக்களின் உயிர்காக்கும் இடம்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவை சுற்றியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற ஏழை மக்கள் சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் பற்றாக்குறை சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் மருத்துவர் அல்லாத அலுவலர்கள் நோயாளிகளை ஏமாற்றும் விதமாக தங்களை மருத்துவர்கள் போல சித்தரித்து வரக்கூடியவர்களுக்கு என்னவென்று கேட்டு அவர்களுக்கு மருந்து மாத்திரைகளை சீட்டில் எழுதி கொடுத்து வருகின்றனர்.
மழையால் பாதிக்கப்படும் மருத்துவமனை
இந்த சூழலில் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வாறு மழை பெய்து வரும் நிலையில், மருத்துவமனையில் உள்ள மழை சரசர வென பெய்து மருத்துவனையின் உள்ளே குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், நோயாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் மழை பெய்வதும், மழை நீர் தேங்கி நிற்கும் தண்ணீரை அங்கு சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனித்து, பொதுமக்கள் அதுவும் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் மருத்துவமனையை சீர்செய்ய விரைந்து நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக குறித்து அவதூறு: சபாநாயகருக்கு பறந்த சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு போட்ட நீதிமன்றம்