Suzuki Bikes Scooters: இந்திய சந்தையில் கிடைக்கும் சுசூகி நிறுவனத்தின் சிறந்த பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சுசூகி கட்டனா:
சுசூகி கட்டானா ஒரு வலுவான 999 சிசி இன்ஜின் மற்றும் 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. 217 கிலோ எடயுடன், 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை பெற்றுள்ளது. 825 மிமீ இருக்கை உயரத்துடன், அதிகபட்சமாக 150.19 பிஎச்பி ஆற்றலை வழங்குகிறது. Suzuki Katana பைக்கின் ஆரம்ப விலை 13.61 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 23கிமீ மைலேஜ் வழங்குகிறது.
சுசூகி ஹயபுசா:
Suzuki Hayabusa சக்திவாய்ந்த 1,340 cc இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. இது 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் மற்றும் 266 கிலோ கர்ப் எடை கொண்டது. 800 மிமீ இருக்கை உயரத்துடன், ARAI தரநிலைகளின்படி லிட்டருக்கு 18கிமீ மைலேஜை வழங்குகிறது. ஹயபுசா விலை ரூ.16.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
சுசூகி ஜிக்ஸர்:
சுசூகி ஜிக்ஸர், ரூ. 1.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் 155 சிசி இன்ஜஜினை கொண்டுள்ளது. 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் வழங்குகிறது. 141 கிலோ எடை, 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் மற்றும் 795 மிமீ உஅர இருக்கை ஆகியவற்றின் மூலம், ஜிக்ஸர் பல ரைடர்களுக்கு வசதியான விருப்பமாக அமைந்துள்ளது.
சுசூகி ஜிக்ஸர் SF:
Suzuki Gixxer SF ஆனது 155cc BS6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 13.4 bhp மற்றும் 13.8 Nm டார்க்கை உருவாக்குவதோடு, லிட்டருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க்கை பெற்றுள்ள, Gixxer SF விலை ரூ. 1.75 லட்சத்தில் தொடங்குகிறது.
சுசூகி வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ்:
Suzuki V-Strom SX ஆனது 249 cc இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இது 12 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு மற்றும் 167 கிலோ கர்ப் எடை கொண்டது. 835 மிமீ இருக்கை உயரத்துடன், ARAI தரநிலைகளின்படி லிட்டருக்கு 36 kmpl மைலேஜை வழங்குகிறது. V-Strom SX ரூ. 2.11 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
சுசூகி அக்செஸ் 125:
Suzuki Access 125 ஸ்கூட்டரின் விலையானது ரூ. 97,212 இல் தொடங்குகிறது. இதில் உள்ள 124 cc இன்ஜின் அதிகபட்சமாக 8.6 bhp ஆற்றல் கொண்டது. லிட்டருக்கு 45 கிமீ மைலேஜை வழங்குகிறது. 103 கிலோ கர்ப் எடையையும், 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கையும் பெறுகிறது. இது அன்றாட பயன்பாட்டிற்கு வசதியான மற்றும் நடைமுறை தேர்வாக அமைகிறது.
சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125:
சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 விலையானது ரூ.94,301 இல் தொடங்குகிறது. இது 8.58 பிஎச்பி ஆற்றலை வழங்கக் கூடிய, 124 சிசி இன்ஜினுடன் வருகிறது. லிட்டருக்கு 58.5 கிமீ மைலேஜை வழங்குவதாக கூறப்படுகிறது. 110 கிலோ எடையைக் கொண்டுள்ள இந்த வாகனம், 5.5-லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை பெற்றுள்ளது. தினசரி பயணத்திற்கான நடைமுறை மற்றும் திறமையான தேர்வாகும்.
Car loan Information:
Calculate Car Loan EMI