அதிமுக குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 


அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவில் சேர தயாராக இருப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறியது நீதிமன்றம் சம்மன் அனுப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. 


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வழக்கமாக ஜெயலலிதாவுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அவரின் முதல்வர் பதவியை கையாளும் ஆளாக ஒபிஎஸ் இருந்து வந்தார். அதேபோல் அவரின் மறைவுக்கு பிறகும் முதல்வர் பொறுப்பு ஒபிஎஸ்சிடமே வந்தது. 


ஆனால் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக அமைச்சர்களும் எம்.எல்.ஏக்கள் விசுவாசமாக இருந்தது ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கே. அதன்படி சசிகலா ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற முயலும்போது ஒபிஎஸ் போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பமே ஏற்பட்டது. 


அதன்பின் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல, எடப்பாடி பழனிசாமி திடீரென சசிகலாவால் முதலமைச்சராக என பல சம்பவங்கள் நடைபெற்றது. இதற்கு சசிகலாவும் அனைத்து எம்.எல்.ஏக்களையும் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கவைத்து ராஜபோக விருந்து கொடுத்தார். 


இதனால் அப்போதைய அதிமுக ஆட்சியும் தப்பித்தது. இந்த சம்பவங்களின்போதுதான் 40 அதிமுக எம்.எல்.ஏக்கள் தயாராக இருந்ததாகவும் ஸ்டாலின்தான் வேண்டாம் என கூறிவிட்டார் எனவும் அப்பாவு தெரிவித்திருந்தார். 


உண்மைக்கு மாறான அவதூறு செய்தி பரப்பியதாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக வழக்கறிஞர் அணியின் இணை செயலாளர் பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை செப்டம்பர் 9ஆம் தேதி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபாநாயகர் அப்பாவுக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.