புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெட்ரோல், டீசல் கடத்தப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை ஓட்டிய பகுதியாக அமைந்துள்ளது.  புதுச்சேரி மாநிலத்திற்கும் தமிழகத்திற்கும் இடை வரி வித்தியாசம் அதிகம். அதுவும் குறிப்பாக எரி பொருட்களான பெட்ரோல், டீசல் மற்றும் மது பானங்கள் தமிழ்நாட்டை விட இங்கு விலை மிகவும் குறைவு. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இருந்து மதுபான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடத்தப்படுவது தொடர்கதையான ஒன்று. 


Book Fair: உயரத்தை அடைந்தது எப்படி? - மயிலாடுதுறை புத்தக விழாவில் ஆட்சியர் விளக்கம்




இதனை தடுக்க மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதனை தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாக இன்றளவும் இருந்து வருகின்றது. இதற்கு காவல்துறையில் சில காவலர் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. இந்த சூழலில், வழக்கமாக மதுபானம் கடத்தலை தாண்டி தற்போது காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு எரிபொருட்களான பெட்ரோல், டீசல் காவல்துறையினரின் உதவியுடன் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 



தமிழகத்தை விட லிட்டருக்கு சுமார் 8 ரூபாய் வரை புதுச்சேரியில் விலை குறைவு என்பதால், மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டியுள்ள  புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோல், டீசல் இங்கு கடத்தப்படுவதாகவும், இதனை தடுக்க வேண்டிய காவல்துறையினர் சோதனை சாவடிகளில் கையூட்டு பெற்றுக்கொண்டு இவற்றை அனுமதித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் ஆயப்பாடி மற்றும் சந்திரபாடி சோதனை சாவடி வழியாகத்தான் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Imran Khan: திருமண சட்ட விதிகளை மீறிய இம்ரான் கான்.. மனைவிக்கும் சேர்த்து சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!




இந்த சூழலில் தற்போது காரைக்கால் பெட்ரோல் பங்கில் இருந்து ஆயப்பாடி சோதனை சாவடி வழியாக காவல்துறையினரின் உதவியுடன் தரங்கம்பாடிக்கு டிராக்டரில் டீசல் கடத்தப்படுவது போன்ற வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இதன் மூலம்  தமிழக அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், இதனை அரசு தடுத்து நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


திருச்சியில் போதைப்பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை - காவல்துறை ஆணையர் காமினி