மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள யூரோ கிட்ஸ் என்ற தனியார் பள்ளியில் இளைய தலைமுறையும், இந்தியாவும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் KPY பாலா மற்றும் அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திரமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். முன்னதாக சிறுவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு மாணவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இயக்குனர் மந்திரமூர்த்தி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சான்றிதழ் கொடுத்து கௌரவித்தார்.


Thalapathy Vijay: விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என சொன்ன அரவிந்த்சாமி - உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?




பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய KPY பாலா கூறிய போது, தனக்கு தற்போது கல்யாணம் இல்லை என்றும், நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு? விஜய் சார் பீக்கில் இருப்பதாகவும், தான் வீக்கீல் இருப்பதாகவும், அவரைப் பற்றி பேசும் அளவிற்கு தான் பெரிய இடத்தில் இல்லை, அவர் எது செய்தாலும் சரியாக தான் இருக்கும். நடிகர் விஜய் தனது கட்சிக்கு அழைத்தால் செல்வீர்களா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தன்னை கோர்த்து விடுவது போல் இந்த கேள்வி இருக்கிறது, அரசியலில் செல்லும் அளவிற்கு தனக்கு அறிவு இல்லை, பதவி ஆசை எல்லாம் தனக்கு இல்லை, சேவை செய்வதே எனது நோக்கம் என பதில் கூறினார்.


Vijay Political Party: ஸ்கெட்ச் போட்டு தொடங்கப்பட்ட கட்சி; தலைவர் ஆன தளபதிக்காக காத்திருக்கும் கேள்விகள்!




மொத்தம் பத்து என்ற இலக்கு வைத்து தற்போது ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளேன், மேலும் ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துவிட்டு, தொடர்ந்து அடுத்த அடுத்த இலக்குகள் வைத்து அதை நோக்கி பயணிக்க இருப்பதாகவும், பிரைவேட் ஐடிவிங்க் என்ற பெயரில் காசு கொடுத்து கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். அந்த பணத்தை கொடுத்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம், அந்த பணத்தை தன்னிடம் கொடுத்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வேன் என்றார். 


Thalapathy Vijay: அதை செய்தால் விஜய் அரசியலில் காணாமல் போய் விடுவார்.. நாஞ்சில் சம்பத் எச்சரிக்கை!




மேலும் தொடர்ந்து பேசியவர், மக்களுடைய ஆதரவால் தான் தற்போது வரை செயல்பட்டு வருகிறேன். அதேபோன்று தான் செய்யும் சேவையில் 100 சதவீதம் அரசியல் கிடையாது. வருங்கால இளைஞர்களிடம் இருந்து தான் கற்றுக் கொள்கிறேன். அவர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.


Kilambakkam Police Station: கிளாம்பாக்கத்திற்கு வந்த அடுத்த அப்டேட்..! பாதுகாப்பை உறுதி செய்யும் தமிழ்நாடு அரசு..!