மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.


சட்டநாதபுரம் ஊராட்சியில் ஆய்வு


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சட்டநாதபுரம் கிராம ஊராட்சி வரவு செலவு கணக்குகளை கடந்த 23 -ம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆய்வு மேற்கொண்டார். அதன்படி அரசு விதிகளை மீறி ஊராட்சி நிதியில் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதால் குறைபாடுகள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பதவிநீக்கம் செய்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நடவடிக்கை எடுத்துள்ளார்.


Mahindra XUV3XO EV: மஹிந்திரா XUV400 ஐ விட மலிவு விலையில் சந்தைக்கு வரும் XUV3XO EV - கவர்ச்சிகரமான அம்சங்கள் என்ன?




பதவிநீக்கம் செய்து ஆட்சி உத்தரவு 


இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் மகாபாரதி அனுப்பி உள்ள உத்தரவு கடிதத்தில் 1994 -ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(1அ) மற்றும் 205(11) இன் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம், சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி என்பவர் ஊராட்சி சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது தொடர்பாக அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுகளுக்கு அவரால் அளிக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை நன்கு பரிசீலனை செய்து, சட்டநாதபுரம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது. 


TVK Maanadu: தவெக மாநாடு! விஜய்யின் டாப் 5 அரசியல் நிலைப்பாடுகள் இதுதான் - ஓர் அலசல்




அரசு இதழில் வெளியீடு 


இந்த அறிக்கை 1994 -ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட பிரிவு 262 (1)ன் படி தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அரசு இதழில் கடந்த 09.10.2024 அன்று வெளியானதை அடுத்து சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி நீக்க ஆணையை தெட்சிணாமூர்த்தியிடம் நேரில் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.


Rohit Kohli: தொடர் தோல்வி.. பறிக்கப்பட்ட ரோகித், கோலியின் சலுகைகள் - கவுதம் கம்பீர் அதிரடி நடவடிக்கை


சட்டநாதபுரம் ஊராட்சியில் பரபரப்பு 


மக்களால் ஜனநாயக முறைப்படி வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டு பதவி நீக்கம் ஆன சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது ஒருவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு மக்கள் வாக்களித்து தங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருவார்கள் என்ற எண்ணத்தில் இருக்கும் மக்களுக்கு இதுபோன்ற ஊராட்சி தலைவர்களின் செயல் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.


Vijay Tvk: "அவர்களே இவர்களே” சொல்லல, நிர்வாகிகள் பேர மறந்துட்டாரா? தவெக தலைவர் விஜய் மீது தொடங்கிய அட்டாக்..!