தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை ஆணைக்காரன் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


தொடர் இருசக்கர வாகன திருட்டு 


மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சீர்காழி, புத்தூர், கொள்ளிடம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போய்யுள்ளது. காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவாகின. இதனை அடுத்து இது தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மேற்பார்வையில் ஆனைக்கார சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜா தலைமையில் சாமிநாதன், செல்லதுரை, ராஜேஷ் மற்றும் சில காவல்துறையினர் கொண்ட தனிப்படை  அமைக்கப்பட்டது.


Priyanka Mohan : ஆள வுட்றா சாமி...குஷி பட சர்ச்சையால் டிப்ரஸ் ஆன பிரியங்கா மோகன்







தீவிர தேடுதல் வேட்டை 


இந்த தனிப்படையானது சீர்காழி தாலுக்கா முழுவதிலும் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் சிதம்பரத்தில் இருந்து சீர்காழி நோக்கி அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அந்த இளைஞர்கள் காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த இளைஞர்கள் இருவரையும் ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.


Diwali Kubera Pooja: செல்வத்தை தரும் லட்சுமி குபேர பூஜை! தீபாவளியில் எந்த நேரம்? எப்படி செய்ய வேண்டும்?




இரண்டு இளைஞர்கள் கைது


விசாரணையில் கடலூர் மாவட்டம் வடக்குத்திட்டை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பரமகுரு என்பவரது மகன் 22 வயதான பார்த்திபன். மற்றும் மேல மணக்குடி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் 9-ம் வகுப்பு மட்டுமே படித்த பார்த்திபனும், ஐடிஐ பயின்ற ராகவனும் அருகருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதும், இருவரும் வேலைக்குச் செல்லாமல் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரியவந்தது.


K S Ravikumar : உங்களுக்கு என்மேல கோபம் வரலயா...நெல்சன் மூஞ்சிக்கு நேராக கேட்ட கே.எஸ் ரவிகுமார்




எட்டு வாகனங்கள் மீட்பு 


இதனை அடுத்து இருவரிடம் இருந்த 8 இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் புதுப்பட்டினம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருடப்பட்ட 3 இருசக்கர வாகனம், ஆணைக்காரன் சத்திரம், பூம்புகார், தாம்பரம், கோயம்புத்தூர், சேத்தியாத்தோப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தலா 1 இருசக்கர வாகனம் அடங்கும். இதுகுறித்து வழக்கு பதிந்த ஆனைக்காரன் சத்திரம் காவல்துறையினர் பார்த்திபன் மற்றும் ராகவன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.  


Prison Safety: அடடே..! சிறை பாதுகாப்புக்காக வாத்துகளை பயன்படுத்தும் நாடுகள் - எப்படி, காரணம் என்ன?