சீர்காழியில் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனத்தில் பட்டப்பகலில் கண்ணாடி கதவு பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த வெளிநாட்டு பணம் உள்ளிட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு பண பரிமாற்றம் நிறுவனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாளன் வடக்கு வீதியை சேர்ந்த 38 வயதான தமிஜூதீன். இவர் சீர்காழி - சிதம்பரம் பிரதான நெடுஞ்சாலையில் வெளிநாட்டு பண பரிமாற்றும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் சீர்காழி ரயில்வேரோட்டை சேர்ந்த தாருண்யா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தாருண்யா நிறுவனத்தின் கண்ணாடி கதவினை பூட்டிவிட்டு வங்கிக்கு சென்றுள்ளார்.
கொள்ளைபோன பணம்
அவர் திரும்பி வந்து பார்த்தபோது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த காருண்யா உள்ளே சென்று பார்த்தபோது கடை கல்லாபெட்டி உடைக்கப்பட்டு, அதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த இந்திய ரூபாய் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2200 சவுதி ரியால், யு.ஏ.இ பணம் 500 என மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இதனை அடுத்து இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் தமிஜூதீனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக கடைக்கு வந்த அவர் இந்த திருட்டு சம்பவம் குறித்து சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
HBD Thalapathy Vijay: என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
காவல்துறையினர் விசாரணை
தமிஜூதீன் புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சதீஸ் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதேபோன்று அதேநபர் சீர்காழி புதியபேருந்து நிலையம் அருகில் தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் ஆள் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர் ரூபாய் 3 ஆயிரத்தை திருடி சென்றது குறித்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பகல் வேளையில் ஆள் இல்லாத நேரங்களில் இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிகழ்வு சீர்காழி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரு கடைகளிலும் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சி கொண்டு திருட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்