மயிலாடுதுறை அருகே போக்சோ வழக்கில் காவல்துறையினர் செய்த மேல்முறையீட்டில், இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுதொடர்பாக குத்தாலத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் 29 வயதான ராஜேஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் குத்தாலம் காவல்நிலையத்தில் இவ்வழக்கினை விசாரணை செய்த காவல் ஆய்வாளர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் விசாரணையானது நாகப்பட்டினம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட 12 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு கடந்த 2017 -ம் ஆண்டு செப்டம்பர் 22 -ம் தேதி இவ்வழக்கின் எதிரியானவர் குற்றவாளி அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
அதனைத் தொடர்ந்து திருச்சி மண்டல காவல்துறை தலைவர் உத்தரவின்படி, இவ்வழக்கின் மேல்முறையீடானது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீட்டில் இவ்வழக்கில் தொடர் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தால் நடத்தப்பட்டு, வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையானது நேற்று நடைபெற்ற நிலையில், நாகப்பட்டினம் மகிளா நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மேற்படி ராஜேஷ் என்பவர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Crime: கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்!
கடுங்காவல் தண்டனை விதிப்பு
இவ்வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு இரண்டு பிரிவுகளில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 2000 அபராதமும் மற்றும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளி அபராதத்தை கட்டத்தவறும் பட்சத்தில் குற்றவாளிக்கு மேலும் 6 மாதம் கால சிறைதண்டனையும் விதிக்க உத்தரவிட்டார். தண்டனை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி ராஜேஷ் குத்தாலம் காவல் ஆய்வாளர் ஜோதிராமன் திருச்சி சிறையில் கொண்டு சென்று அடைத்துள்ளார்.
Nepal Road Accident: நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 14 இந்தியர்கள் உயிரிழப்பு!
காவல்துறையினருக்கு பாராட்டு
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து திறம்பட நீதிமன்ற அலுவல் புரிந்த மயிலாடுதுறை மாவட்ட குத்தாலம் காவல்நிலைய காவல்துறையினரை திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஜியாவுல்ஹக், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் ஆகியோரை வெகுவாக பாராட்டினர்.
Uttar Pradesh: ஒரு மாதம் சம்பளத்தை இழக்கும் 13 லட்சம் அரசு ஊழியர்கள்? - உ.பி. அரசு அதிரடி! ஏன்?