நேபாளத்தில்  40 பயணிகள் சென்ற பேருந்து எதிர்பாரா விதமாக ஆற்றில் கவிழ்ந்து  ஏற்பட்ட விபத்தில் 14 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்காப்பட்டுள்ளது. 


உத்தர பிரதேச மாநில பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று, 40 பயணிகளுடன் நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக நேபாள காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளர். 






இதுகுறித்து தனாஹூன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீப்குமார் ராயா கூறுகையில், “ ‘UP FT 7623’ என்ற பதிவெண் கொண்ட பேருந்து ஆற்றில் விழுந்து கரையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இந்தப் பேருந்து போக்ஹாரவில் இருந்து காத்மாண்டு சென்று கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்று தெரிவித்தார். 






போகாராவில் இருந்து நேபாள தலைநகரான காத்மாண்டுவுக்கு செல்லும் போது பேருந்து விபத்துக்குள்ளானதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் பலர் இந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) மாதவ் பாடேல் தலைமையிலான 45 ஆயுத போலீஸ் படை வீரர்கள் குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 


அவசர உதவி எண் அறிவிப்பு: