மயிலாடுதுறையில் கடந்த 02.04.2024 அன்று இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கின்றனர். இருந்தபோதிலும் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிப்பது என்பது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது வருகிறது.
சிறுத்தை
இந்நிலையில் கடந்த 2 தேதி முதல் சுமார் ஒரு வார காலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 22 கிலோமீட்டர் சுற்றளவில் சுற்றி திரிந்த நிலையில், ஏப்ரல் 7 -ம் தேதிக்கு பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை. அதன் காரணமாக சிறுத்தையை தேடும் வேட்டையை திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனைக்குள் இருக்கும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. அதனை அடுத்து அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தேடுதல் பணியில் தீவிரப்படுத்தினர். ஆனால் அங்கும் சிறுத்தை குறித்து தகவல் கிடைக்கவில்லை.
முதலை நடமாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலகுடி கிராமத்தில் கூப்பிடுவான் உப்பனாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் முதலை இருப்பதை அப்பகுதி விவசாயிகள் சிலர் பார்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் வந்த வனத்துறையினர் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் காளிகாவல்புரம் கூப்பிடுவான் உப்பனாறு தெற்கு பகுதியில் முதலை இருப்பதால் ஆற்றின் உட்பகுதியில் பொதுமக்கள் இறங்கவோ மற்றும் கரைப்பகுதியில் நடக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.
VVPAT Case: விவிபேட் வழக்கு.. தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் எழுப்பிய 5 முக்கிய கேள்விகள்!
வனத்துறையினர் மீது புகார்
வனத்துறையினர் எச்சரிக்கை பலகையை பொதுமக்களின் பார்வையில் படாமல் காட்டுப் பகுதியில் வைத்துள்ளதாகவும், முதலையை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடைகள் கோடை காலத்தில் தண்ணீர் குடிக்க ஆற்றில் இறங்கும் போது முதலையால் ஆபத்து உள்ளதால் மாவட்ட நிர்வாகம் முதலையை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தையைத் தொடர்ந்து முதலை
மயிலாடுதுறையில் கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி தென்பட்ட சிறுத்தையை இதுவரை பிடிபடாத நிலையில், தற்போது சிறுத்தை எங்கு உள்ளது என்ன ஆனது? என்று பொதுமக்களில் அச்சம் தீராத சூழலில், மக்களை மேலும் அச்சுறுத்தும் வகையில் தற்போது முதலை நடமாட்டம் என வனத்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ள நிகழ்வு மாவட்ட மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொள்ளிடம் அணைக்கரை பகுதியில் அதிகளவில் முதலைகள் உள்ளன. அவைகள் அவ்வபோது கொள்ளிடம் ஆற்றின் மூலம் மயிலாடுதுறையின் பல்வேறு பகுதிகளுக்கு வருவது என்பது தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிட்டதக்கது.
TN Weather Report: தேவையில்லாம வெளியே போகாதீங்க; சேலம்தான் 3வது இடம்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை