அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்த கடை மற்றும் ஏஜென்சிக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பிளாஸ்டிக் பொருட்களையும், பொருட்கள் ஏற்றி வந்த வேனை பறிமுதல் செய்து மயிலாடுதுறை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும் தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு விற்பனையும் இன்றளவும் குறைந்த பாடில்லை.


ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய், கடலை எண்ணெய் வழங்கக் கோரி உசிலம்பட்டியில் சாலை மறியல்




இந்நிலையில், மயிலாடுதுறை நகராட்சி அதிகாரிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிகை பறிமுதல் செய்வதும், அபராதம் விதித்ததும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் தனியார் ஏஜென்சி மூலமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளுக்கு மொத்தமாக விற்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதனை அடுத்து மயிலாடுதுறை நகராட்சி சுகாதார அலுவலர் சுரேஷ் தலைமையில் நகராட்சித்துறையினர் ஆய்வு மேற்கொண்டர்.


Vishnu Vishal: தம்பிக்காக தயாரிப்பாளராக மாறிய விஷ்ணு விஷால்: உடன் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்!




அப்போது, பூக்கடைத்தெரு என்ற இடத்தில் தனியார் மொத்த வியாபார கடையில் லோடு வேனில் பொருட்கள் இறங்கியதை பார்த்துள்ளனர். அந்த வேனை சோதனையிட்டதில், அதில் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பேப்பர் இலை, கப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உள்ள சென்று ஆய்வு செய்த போது அங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்துள்ளது. இதனை அடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அது குறித்து விசாரணை மேற்கொண்டதில், தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவந்து தெரியவந்தது. 


JEE Mains Result Topper: ஜேஇஇ மெயின் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற நெல்லை மாணவர்!- யார் இவர்?




இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் சுமார் 300 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அக்கடைக்கு 10 ஆயிரம் ரூபாயும், திருநாகேஸ்வரம் தனியார் ஏஜென்சிக்கு 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிவந்த லோடு வேனை பறிமுதல் செய்தனர்.  மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் விதமாக, தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தப்படும் என்றும், பிளாஸ்டிக் பொருள்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Watch Video: கிரிக்கெட்டில் கலக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுட்டிக் குழந்தை ஹ்யூகோ! வைரல் வீடியோ!