சீர்காழி  அருகே நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய உலோக உருளை வடிவ மர்ம பொருளில் அபாயம் தொடாதீர்கள் என எழுதியுள்ளதால் வெடிக்கும் தன்மையுள்ள பொருளா? என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கடலோர பகுதிகளில் அவ்வப்போது ஏதேனும் ஒரு மர்ம பொருட்கள் கரை ஒதுங்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக சில பொருட்கள் வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்களாக இருப்பதால், இது போன்ற பொருட்கள் ஒதுங்கும் போதெல்லாம் கடற்கரை பகுதியில் பெரும் பதட்டம் தொற்றிக் கொள்கிறது.


Minister Sivasankar: எடப்பாடி பழனிசாமியை அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றிக்காட்டத் தயார் - அமைச்சர் சிவசங்கர்




இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவர் கிராமத்தில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று காலை உலோகத்தால் ஆன உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. சுமார் ஒன்றை அடி நீளமும், 6 அங்குல விட்டமும் கொண்ட வெள்ளை நிற அந்த மர்ம பொருளின் மேலே அபாயகரமானது, தொடாதீர்கள், காவல்துறைக்கு தெரிவியுங்கள் என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதனை கண்ட மீனவர் கிராம மக்கள் அது வெடிக்கக் கூடிய தன்மை உடைய பொருளாக இருக்க கூடும் என அச்சமடைந்தனர். மேலும் இது குறித்து உடனடியாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும், பூம்புகார் கடற்கரை போலீசார்க்கும் தகவல் அளித்தனர். 


Weather Update: மழை வருமா வராதா? காதலர் தினத்தில் வானிலை எப்படி இருக்கும்? அப்டேட் இதோ!




நாயக்கர் குப்பம் மீனவர்களின் தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த கடலோர பாதுகாப்பு போலீசார், மர்ம பொருளைப் பார்வையிட்டு அதன் அருகே பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த உருளை குறித்து வெடி பொருள் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியை தீவிரபடுத்தியுள்ளனர். இதனால் நாயக்கர் குப்பம் மீனவர் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது கப்பல்களில் சிக்னலுக்காக வெடிக்க பயன்படுத்தும் வானவெடி குண்டு என முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்‌.


Delhi: பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி: மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு - பின்னணி இதுதான்!