மழலை கிரிக்கெட்டர்:
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் முக்கியமான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட். பொதுவாக கிரிக்கெட் விளையாடுவதற்கு நாம் பெரிதாக மெனக்கட வேண்டியதில்லை. ஒரு பேட் மற்றும் ஒரு பந்து இருந்தாலே போதும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து தரப்பினரும் விளையாடலாம். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடும்போது அதை பார்ப்பதற்கு நமக்கு ஆயிரம் கண்கள் தேவைப்படும்.
அவ்வளவு குறும்புத்தனம் இருக்கும் குழந்தைகள் கிரிக்கெட் ஆடுவதை பார்க்கையில். அப்படித்தான், கிரிக்கெட் என்றாலே நம் நினைவுக்கு வரும் ஆஸ்திரேலிய நாட்டில் தற்போதே கிரிக்கெட்டில் இந்தியாவை மிரட்டுவதற்கு உருவாகி வருகிறார் ஒரு மழலை கிரிக்கெட்டர்.
கிரிக்கெட்டில் கலக்கும் சுட்டிக் குழந்தை ஹ்யூகோ:
முன்னதாக கிரிக்கெட்டின் ஜாம்பவனாக திகழும் ஆஸ்திரேலிய அணியிடம்தான் சர்வதேச ஐசிசி கோப்பைகள் அனைத்தும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச டி20 உலகக் கோப்பை, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை, 2023 ஆம் ஆண்டின் சர்வதேச டெஸ்ட் உலகக் கோப்பை, 2023-ஆம் ஆண்டின் ஒரு நாள் உலகக் கோப்பை, 2024 ஆம் ஆண்டின் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இப்படி அனைத்தையும் தங்கள் வசம் வைத்திருக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
இப்படி கிரிக்கெட் என்றால் ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா என்றால் கிரிக்கெட் என்பதுபோல் இருக்கிறது. இந்நிலையில்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 3 வயதேயான ஹ்யூகோ என்ற குழந்தை லாவகமாக தனக்கு வீசப்படும் பந்துகளை எல்லாம் சிக்ஸருக்கு பறக்க விடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
சிறுவயதில் இருந்தே நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து விட்டேன் என்று இந்திய அணி வீரர் விராட் கோலி கூற கேட்டிருப்போம். ஆனால், பார்த்திருக்க மாட்டோம். தற்போது ஹ்யூகோ என்ற குழந்தை அசத்தலாக கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பார்க்கிறோம். பார்ப்பதற்கே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பது போன்ற கருத்துகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: IND vs ENG TEST: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்...ராகுலுக்கு பதில் சர்பராஸ் கான் களமிறங்குவாரா?
மேலும் படிக்க: Saurabh Tiwary: சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கலக்கிய செளரப் திவாரி