உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22 -ஆம் தேதி அதாவது நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பகல் 12.20 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை, நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 9 ஆயிரம் திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

விழாவையொட்டி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் ஜனவரி 22-ஆம் தேதி அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், ஆன்மீக பெரியவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 

Ram Mandir : ஊடகங்களே உஷார்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பன்று இதை செய்ய வேண்டாம்.. மத்திய அரசு அதிரடி

இந்நிலையில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் பிப்ரவரி 2 -ஆம் தேதி தருமபுரம் ஆதீன கர்த்தர் முன்னிலையில் நடைபெறுகிறது. இதனை அடுத்து குரு லிங்க சங்கம பாதயாத்திரையாக ஆதீன பூஜா மூர்த்தி சொக்கநாதர் உடன் இரண்டாம் நாள் பாதயாத்திரை மயிலாடுதுறை வதானேயேஸ்வரர் ஆலயத்தில் இருந்து இன்று ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் துவங்கினார். 

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு! இசையமைத்து எதிர்பார்ப்பை எகிற வைத்த நடிகை சுகன்யா..!

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் ”22 -ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு ஆலயங்கள் ராமாயணம் மற்றும் மகாபாரதத்துடன் தொடர்பு உடையது. தருமையாதீனத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில் ராமர் ஜடாயு தொடர்பு குறித்து திருஞானசம்பந்த பெருமானால் 1500 ஆண்டுகளுக்கு முன்பே பாடல் பெற்றுள்ளது. இங்கு ஜடாயு தகனம் செய்த குண்டம் தற்போதும் அமைந்துள்ளது. 

நாளை அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு? ரஜினி முதல் சதீஷ் வரை லிஸ்ட் இதோ

இது போல் பல்வேறு ஆலயங்கள் தமிழ்நாட்டில் ராமாயணத்துடன் தொடர்புடையது. இந்தியாவின் சிறந்த ஆட்சி, ராமர் ஆட்சியாகும். அப்படிப்பட்ட ராமருக்கு 100 கோடி இந்திய மக்கள் மனம் மகிழும் படி கும்பாபிஷேகம் வருகின்ற 22 -ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது செய்த தவ பயனாக பிரதமர் மோடி பல்வேறு ஆலயங்களில் சுற்றுப்பயணம் செய்து 22 -ஆம் தேதி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை செய்ய இருக்கிறார். நமது பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உலகமே இதனை வரவேற்கிறது. ஆலய கும்பாபிஷேகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் திறப்புக்கு பொது விடுமுறையா? மாணவர்கள் வழக்கு.. நீதிமன்றத்தின் முடிவு என்ன?