தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக பல ஆண்டுகளாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை இதுநாள் வரை சரிசெய்ய முடியாத நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்று புதிதாக ஒரு பிரச்சினை மதுப்பிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


Hemant Soren: கைதாகிறாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்? வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை விசாரணை




தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி குடித்துவிட்டு வீசியெறியும் காலி மதுபாட்டில்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு காலி மதுபாட்டில்களை திரும்பபெறும் வகையில்  கியூ.ஆர் கோடு திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.  தற்போது இந்த கியூ.ஆர் கோடு உள்ள மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெறப்பட்டு காலிபாட்டிலை மீண்டும் டாஸ்மார்க் மது பான கடையில் திருப்பிக் கொடுத்தால் பத்து ரூபாய் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


JACTO GEO Protest: பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்‌ போராட்டம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு




இந்தத் திட்டத்தால் பொது இடங்கள் மற்றும் வயல்வெளி பகுதிகளில் மது பாட்டில்களை வீசி செல்லும் நிலை மாறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் ஏற்கனவே மதுபாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது கியூஆர் கோடு என்ற பெயரில் மேலும் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதற்கு மது பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் கியூஆர் கோடு மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ருபாய் வழங்க மறுத்து மது பிரியர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


Ram Temple : 'ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்' - வானதி சீனிவாசன் கோரிக்கை




இந்த பிரச்சனையால் டாஸ்மாக் மதுபானக்கடை மூடப்பட்டது. இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர்  மதுப்பிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மதுப்பிரியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகு  மூடப்பட்ட கடை மீண்டும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. மேலும் இந்த பிரச்சினை தொடாமல் இருக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இச்சம்பவத்தால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Priyanka Deshpande : திரும்பவும் அந்த தவறை செய்யக்கூடாது.. உண்மையை உடைத்த பிரியங்காவின் அம்மா... ரசிகர்கள் அதிர்ச்சி