தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக சுருளி அருவி விளங்குகிறது. தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், மூணாறு வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் சுருளி அருவிக்கு வந்து செல்கின்றனர். சுருளி அருவி வனப்பகுதியில் உள்ளதால் அவ்வப்போது காட்டு யானைகள் அருவி பகுதிக்கு  வருவது வழக்கம். அப்போது சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதிப்பார்கள்.


Suriya son of Krishnan : சில்லறையை சிதறவிடும் வாரணம் ஆயிரம் படத்தின் தெலுங்கு வெர்ஷன்!



இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக சுருளி அருவி பகுதிக்குள் நுழைந்தது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


World Archery Championship 2023: 42 ஆண்டுகால காத்திருப்பு.. தங்கம் வென்ற இந்திய அணியின் மங்கைகள்.. மெக்சிகோவை வீழ்த்தி புதிய வரலாறு படைப்பு!




7.5% இடஒதுக்கீடு: மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு!


ஆனால் காட்டு யானைகள் செல்ல மறுத்து அங்கேயே முகாமிட்டுள்ளது. இன்று 4வது நாளாக காட்டு யானைகள் அருவி பகுதியில் வந்தன. அவற்றை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காட்டு யானைகள் நடமாட்டம் எதிரொலியாக இன்று 4வது நாளாக சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண