பெரியகுளம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து 22 வயது அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்த சிறுமிக்கு வயது 15. ஆகிய இருவரும் இரு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள், நண்பர்களாக பழகி வந்த இவர்கள் நாளடைவில் ஒருவரை ஒருவர் விரும்பியுள்ளனர். இவர்கள் பழக்கத்திற்கு வீட்டில் இருப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோரின் எதிர்ப்பால் இன்று காந்திநகர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் வேலவர் மாலையம்மா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். இதில் மூத்த மகள் அழகம்மாள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் கணேசன், மூன்றாவது மகன் தற்கொலை செய்து கொண்ட மாரிமுத்து 22 வயது.
அதே பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் மகள் ஆனந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவரும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரிமுத்து மற்றும் ஆனந்தி காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தியின் பெற்றோர் மாரிமுத்து மீது புகார் அளித்த நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு நீண்டநேரம் ஆகியும் மாரிமுத்து மற்றும் ஆனந்தி வீடு திரும்பாத நிலையில், இரண்டு தரப்பு பெற்றோருமே தேடி வந்த நிலையில் இன்று காந்திநகர் அருகே உள்ள மாந்தோப்பில் மாரிமுத்து மற்றும் ஆனந்தி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிறுமியும், இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் இவர்களது விருப்பத்திற்கு ஒப்புக்கொள்ளதாதல் மனமுடைந்த இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்