Suriya son of Krishnan : சில்லறையை சிதறவிடும் வாரணம் ஆயிரம் படத்தின் தெலுங்கு வெர்ஷன்!
2000களில் இருந்த இளைஞர்களின் மனதை தனது காதல் படங்கள் மூலம் ஆண்டு வந்த கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வாரணம் ஆயிரம்’.
சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
கதாநாயகனின் அப்பா (கிருஷ்ணன்) காலமாக, ராணுவத்தில் பணி புரியும் மகன் (சூர்யா) தனது கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்க்கிறார். அவரின் ஃபளாஷ் பேக் வழியே படத்தின் கதையும் நகர்கிறது.
70களில் தனது அப்பா - அம்மாவிற்கு இடையே இருந்த காதல், திருமண வாழ்வு, சூர்யாவின் முதல் காதல் மேகனா, மேகனாவின் இழப்பு, தனிமையில் வாடும் சூர்யா, நொருங்கி போன மனதை ஒட்ட வந்த சிறுவயது தோழி திவ்யா, திவ்யாவுடனான திருமண வாழ்வு, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் சூர்யாவின் வீட்டில் ஈடு செய்யமுடியாத மரணம் என ஒவ்வொரு ப்ரேமிலும் கெளதம் மேனின் மேஜிக் நிறைந்து இருக்கும்.
ஹாரிஸ் ஜெயரஜை பற்றி சொல்லவில்லை என்றால் அபத்தம் ஆகிவிடும். ஏனென்றால், இப்படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை முதல் அனைத்து பாடல்களும் செம ஹிட்டானது.
தற்போது இப்படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்ஷனான சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் ரீ-ரிலீஸாகி தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் நடிகர் சூர்யாவிற்கு தமிழ் நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களிலும் ரசிகர் கூட்டம் இருப்பது தெரிகிறது.