காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மலை கிராம பகுதியை சேர்ந்த 4 நபர்களை பெரியகுளம் தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வெள்ளகெவி ஊராட்சிக்குட்பட்ட சின்னூர் காலனியைச் சேர்ந்த கிராம மக்கள் பெரியகுளத்தில் நடைபெற்ற திருமண நிகழ்விற்கு வந்துவிட்டு, சின்னூர் மலை கிராமத்திற்கு 10 பேர் சென்றதாகவும், அப்பொழுது கல்லாற்றைக் கடக்கும் பொழுது திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்படவே நான்கு நபர்கள் மறுகரையில் தப்பிச்சென்ற நிலையில், அவர்கள் ஆற்றின் நடுவே உள்ள பாறை மற்றும் மண் திட்டுகளில் ஏறி நின்று தப்பித்துள்ளனர்.


Crime: கணவருடன் ஏற்பட்ட சண்டையால் 4வயது சிறுமி கொலை.. போலீஸ் ரோந்து வாகனம் வந்ததும் தாய் செய்த செயல்..!




இந்த நிலையில், மறு கரையில் சென்ற மலை கிராம மக்கள் பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த பிச்சை, நாகராஜ் கணேசன், சுரேஷ் ஆகிய நான்கு நபர்களை தீயணைப்புத் துறையினர் கயிற்றைக் கட்டி பாறைகளைப் நடுவில் தவித்த கிராம மக்கள் நான்கு நபர்களையும் பாதுகாப்பு உபகரணங்களை அணிவித்து  தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி  பத்திரமாக மீட்டனர்.


Karnataka: கோயில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கர்நாடகாவில் பரபரப்பு


Ramarajan: மக்கள் என்னை மறக்காமல் இருக்க இளையராஜா தான் காரணம் - ராமராஜன் நெகிழ்ச்சி!


காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 4 நபர்களும் பெரியகுளத்தில் உள்ள அவரது உறவினர்கள் இல்லத்தில் தங்க சென்றனர். மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மலை கிராம மக்கள் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக  கல்லாற்று பகுதியில்  பாலம் கட்டி தர பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இதுபோன்று மழைக்காலங்களில்  ஆண்டுதோறும் உயிரை பணயம் வைத்து செல்லும் பொழுது இது போன்ற நிகழ்வில் சிக்கிக் கொள்வதாகவும்  சில உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையோடு தெரிவிப்பதோடு, தேனி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விரைந்து செயல்பட்டு  மலை கிராம மக்களுக்கு பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.