தொடர் கனமழையால் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் அணையின்  நீர் மட்டம்  உயர்ந்து 50 அடியை எட்டியது. சோத்துப்பாறை  அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் மஞ்சளாறு அணையும் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Crime: கேஸ் சிலிண்டரில் கசிவு.. தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு




தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் குடிநீர் ஆதாரத்திற்கும் விவசாய பாசனத்திற்க்கு உள்ளது மஞ்சளாறு அணை மற்றும் சோத்துப்பாறை அணை. கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையின் தொடர் கனமழையால்  அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.


Madurai: வைகை ஆற்றில் குளிக்க சென்ற 4-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!


இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வரும் நிலையில்,  மஞ்சளார் அணையின் நீர்மட்டம்  அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 50 அடியை எட்டியுள்ளது.




தற்பொழுது மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து  135 கன அடியில் இருந்து  250 கன அடியாக உயர்ந்துள்ளதால்,  மஞ்சளார் அணையின் நீர்மட்டம் சட்டென உயர்ந்து வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியவுடன்  மஞ்சளார் அணையில்  முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும்,  53 அடியில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும்,  55 அடியில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உபரி நீர் வெளியேற்றப்படும். சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் மஞ்சளார் அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




இதேபோல் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி ஏற்கனவே உபரி நீர் வெளியேற்றப்பட்டு  வரும்  நிலையில், பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு, உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் பெரியகுளம் வராக நதி ஆற்றில் கலந்து செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வராகநதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.