அருணாச்சலப் பிரதேசில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த மேஜர் ஜெயந்த் உடல் அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்துக்கு கொண்டு வரப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் ராணுவ வீரரின் உடலுக்கு வீரவணக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
TN Weather Update: சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் பரவலாக மழை.. எங்கெல்லாம் தெரியுமா?
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள போம் டீலா பகுதி அருகே உள்ள மேற்கு மண்டாலா பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ரக ஹெலிகாப்டரில் லெப்டினட் கர்னல் வி வி பி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஹெலிகாப்டரில் பழுது ஏற்பட்ட நிலையில் ஹெலிகாப்டரில் இருந்து தகவல் முற்றிலும் துண்டிக்கப்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராணுவ வீரர்கள் இந்த விபத்தில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தது கண்டறிந்தனர். இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடல் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து விமான மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஜெயமங்கலத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில் நாளை இறுதிச்சடங்குகள் ராணுவ மரியாதை உடன் நடைபெற உள்ளது. ஜெயந்த் உயிரிழந்த சம்பவம் கேட்டு அவரது உறவினர்கள் அந்த கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Raashi khanna : 'வாய் பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே..' ராஷி கண்ணாவின் பாரீஸ் விசிட்!
ஆறுமுகம் என்பவரின் மகனான ஜெயந்த் கடந்த 12 ஆண்டுகளாக ராணுவத்தில் சேர்ந்து, அதன் பிறகு மேஜராக பணிபுரிந்து வந்தார். ஜெயந்த்தின் மனைவி ஸ்டெல்லா சாராவுடன் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை.
ஜெயமங்களம் பகுதியைச் சேர்ந்த ராணுவ மேஜர் உயிரிழந்தது ஜெயமங்களம் பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ராணுவ வீரரின் உடலுக்கு வீரவணக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.