தமிழக பகுதிகளின் மேல் நிலவும்  வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


19.03.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல்  மிதமான மழை   பெய்யக்கூடும்.


20.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்   லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 4, சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), வால்பாறை பிஏபி (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 2, தேவாலா (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), பெரியார் (தேனி) தலா 1. 


தமிழகம் மற்றும் புதுச்சேரியின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.  சென்னையில் ஆயிரம் விளக்கு, நந்தனம், தேனாம்பேட்டை, சிண்டி, மடிப்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், அடையாறு, அமைந்தக்கரை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.