இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி.  இந்த நவராத்திரி பண்டிகையானது 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கடந்த மாதம் செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 5-ஆம் தேதியுடன் சரஸ்வதி பூஜை, விஜயதசமியுடன் நிறைவடைகிறது. துர்கா தேவியை வழிப்படும்  விதமாக இந்த பண்டிகையை மக்கள் வழிபடுகின்றனர்.


IND vs SA 2nd T20I LIVE: தென்னாப்பிரிக்கா டி20 தொடரை வெல்லுமா இந்தியா? முதலில் பேட்டிங்


அதாவது, சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி ஆகிய 9 தேவிகளையும் நவராத்திரியின் 9 நாட்களிலும் ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் வழிபட்டு வருகின்றனர். நவராத்திரியின் நிறைவு நாளாக விஜயதசமி அன்று தசரா கொண்டாடப்படும். ஒன்பது நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் இவ்விழாவில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்களை வணங்கி வழிபாடு செய்யப்படுகிறது. இந்த நாட்களில் வீடு மற்றும் கோயில்களில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம்.


IND v SA 2nd T20: வரலாறு படைக்குமா இந்தியா..? தெ.ஆப்பிரிக்காவிற்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை வெல்லுமா..?


அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தினசரி கோயிலுக்கு சென்று துர்க்கை அம்மனை வழிபட்டு வருகின்றனர்.


Minister Ponmudi : கிராமசபை கூட்டத்தில் பாதியிலே வெளியேறிய அமைச்சர் பொன்முடி..! ஏன் தெரியுமா...?


இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ள கம்பராய பெருமாள் கோவிலில் நவராத்திரி பண்டிகை முன்னிட்டு பொது மக்களின் வழிபாட்டுக்காக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தின் காசி விஸ்வநாதர் சன்னதியின் வடக்கு புறத்தில் அமைந்துள்ள சஷ்டி மண்டபத்தில் 9 படிக்கட்டுகளில் அம்மனின் ஒன்பது அவதாரங்கள் குறித்த கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.


Mulayam Singh Yadav Health: உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் கவலைக்கிடம்..! ஐ.சி.யூ.வில் அனுமதி..!


Madurai : ”அண்ணாமலை அளித்த தகவலால் ஜே.பி.நட்டா மானம் போனது” - மாணிக்கம் தாகூர் பேட்டி


இதில் தமிழர்களின் கலாச்சாரத்தை நினைவுபடுத்தும் விதமாக திருமணம், விளையாட்டு, கரகாட்டம், நிச்சயதார்த்தம் போன்றவற்றைகளை பிரதிபலிக்கும் கொலு பொம்மைகளும், தெப்பக்குளம், பள்ளிக்கூடம், கிளி ஜோதிடம், சலவைத் தொழில், 12 ஆழ்வார்கள், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தது . அதனை தொடர்ந்து ருத்ராட்சலிங்கமும் வைக்கப்பட்டிருந்தது. தினசரி மாலை நேரத்தில் கம்பராய பெருமாள் கோவில் வைக்கப்பட்ட கொலுபொம்மைகள் மற்றும் அம்மனுக்கு செய்யப்படும் சிறப்பு பூஜைகளை கண்டு வழிபடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செய்கின்றனர்.