தேனி அருகே உள்ள மஞ்சுநாயக்கன்பட்டி கிராமத்தில் மகாராஜன் பிரியங்கா தம்பதியினர் ஆறு மத ஆண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிரியங்காவின் கணவர் மகாராஜன் சவுதி நாட்டில் எலக்ட்ரிகல் டவர் நிறுவும் பணி செய்து வந்தார். இவர் கடந்த வருடம் பணி முடித்துவிட்டு தற்போது ஒரு ஆண்டுகளாக அவருடைய மனைவியுடனும் மற்றும் குடும்பத்தாருடனும் வசித்து வந்துள்ளார். மகாராஜனின் அப்பா அம்மா தங்கை ஆகியோர் இணைந்து பிரியங்காவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பிரியங்கா கடந்த 4ஆம் தேதி தனது வீட்டில் வைத்திருந்த கொசு மருந்தினை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
DON’T PANIC Bengaluru: “தண்ணீர் இருக்கு..கவலைப்படாதீங்க” - பெங்களூரு மக்களுக்கு கிடைத்த நற்செய்தி!
மன உளைச்சல்:
அப்போது உறவினர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து பிரியங்காவின் தகப்பனார் மந்திரி பழனி செட்டியாபட்டி காவல் நிலையத்தில் கொடுத்த வழக்கின் அடிப்படையில் பழனி செட்டிபட்டி காவல்துறையினர் மகாராஜன் அவருடைய அப்பா அம்மா தங்கை ஆகிய மூவரையும் வரும் 11ஆம் தேதி பழனி செட்டிப்பட்டி காவல் நிலையத்தில் குடும்பத்துடன் விசாரணைக்கு வர வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த பிரியங்கா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். மூன்று நாட்களாக வீட்டில் இருந்த பிரியங்கா மன உளைச்சலில் இருந்ததாகவும் மகாராஜனின் குடும்பத்தினர் அவரை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
DMK - ADMK: சூடுபிடிக்கும் மக்களவை தேர்தல்.. திமுக, அதிமுகவில் இன்றுமுதல் வேட்பாளர் நேர்காணல்..
கழுத்தை நெரித்துக் கொலை:
இந்த நிலையில் பிரியங்கா வழக்கம் போல் அவருடைய வேலையை பார்த்து வந்தார் . இந்த நிலையில் மகாராஜன் மனைவியுடன் சண்டை போட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மகாராஜன் தனது மனைவியை அவரது வீட்டில் இருந்த கயிறு மூலமாக பிரியங்காவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது குழந்தையை தனது அப்பா அம்மாவிடம் கொடுத்து விட்டு பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். சரணடைந்த மகராஜனின் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து சென்று பிரியங்காவின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியை கொன்ற கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Manjummel Boys: சங்கி, சாக்கடையில் ஊறும் தவளை.. எழுத்தாளர் ஜெயமோகனை சாடும் இயக்குநர் நவீன்..
இந்நிலையில் பிரியங்காவின் சடலத்தை தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் சடலத்தை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ்சினை வழிமறித்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தேனி அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.