தேனி சமதர்மபுரம் கருணாநிதி தெருவை சேர்ந்தவர் சிவராஜ். அவருடைய மகன் சிவசாந்தன் (12). இவர், தேனியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு  விடுமுறையில் இருந்துள்ளார். தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தேனியில் பழக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் வீரராகவன் (12). இவரும், சிவசாந்தனுடன் 7-ம் வகுப்பு முடித்து இருவரும் 8-ம் வகுப்பு செல்ல இருந்தனர். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றனர். இரவு வரை அவர்கள் வீடு திரும்ப வரவில்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் அவர்களை தேடினர்.


Crime: மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் கும்பல்; புகார் கொடுத்த பெண் கொடூர கொலை.. கேரளாவில் பயங்கரம்




அப்போது அவர்கள் ஓட்டி வந்த சைக்கிள், தேனி ரயில் நிலைய குட்செட் வளாகத்தில் உள்ள குட்டை அருகில் நின்றது. இதனால் குட்டையில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களின் உறவினர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் இரவு 11 மணியளவில் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு வந்து தண்ணீருக்குள் இறங்கி தேடினர். இன்று அதிகாலை 3 மணி வரை தேடிப் பார்த்தும் மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து  காலையில் மீண்டும் தேடுதல் பணி நடந்தது. இந்நிலையில் காலை 8 மணியளவில் குட்டைக்குள் இருந்து சிவசாந்தன், வீரராகவன் இருவரின் உடல்களும் பிணமாக மீட்கப்பட்டன.


TN Weather Update: 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. அதிகபட்ச வெப்பநிலை எவ்ளோ தெரியுமா? இன்றைய வானிலை நிலவர




இரு உடல்களையும் பார்த்து அவர்களின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வீரராகவன், சிவசாந்தன் ஆகியோர் கொக்கு பிடித்து விளையாடப் போவதாக சிலரிடம் கூறிக் கொண்டு அந்த பகுதிக்கு வந்ததாகவும், கொக்கு பிடிக்க முயன்ற போது தண்ணீருக்குள் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதற்கிடையே 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.


HipHop Adhi: '2 வருஷமா படமே வரல.. நான் இப்ப முன்ன மாதிரி இல்ல’ - வீரன் பட நிகழ்ச்சியில் ஆதி உருக்கமான பேச்சு




இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள குட்டையானது ஆபத்தான நிலையில் உள்ளது. குட்செட் அமைப்பதற்காக மண் அள்ளியதால் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் தண்ணீர் ஊற்றெடுத்து குட்டையாக உருவாகி இருக்கிறது. அந்த குட்டையில் மூழ்கி ஏற்கனவே ஒரு முதியவர் பலியாகி இருக்கிறார். கால்நடைகளும் பலியாகி உள்ளன.இருப்பினும் தினமும் இங்கு குளிப்பதற்காக பலர் வருகின்றனர். ஆபத்தான முறையில் குளிக்கின்றனர். இந்த குட்டையை மூட வேண்டும் அல்லது குட்டையை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண