தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆனால் அநேக இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.


அதிகபட்ச வெப்பநிலை : 


20.05.2023 மற்றும் 21.05.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.


நேற்று 13 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கரூர் பரமத்தியில்  41.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேலூரில் 40.7 டிகிரி செல்சியஸ், திருத்தனி 40.1 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 39.8 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 39.7 டிகிரி செல்சியஸ், சேலம் 39.6 டிகரி செல்சியஸ், மதுரை விமான நிலையம் 39.4 டிகிரி செல்சியஸ், மதுரை நகரம் 39.2 டிகிரி செல்சியஸ், சென்னை மீனம்பாக்கம் 39.1 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் 39.0 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் 38.4 டிகிரி செல்சியஸ், நாகப்பட்டினர் 37.7 டிகிரி செல்சியஸ், தருமபுரி 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.


சென்னையை பொறுத்தவரையில் மீனம்பாக்கத்தில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கடந்த வாரம் சென்னையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை 42.7 டிகிரி செல்சியஸ் பதிவானது. மேலும் கடல் காற்று நகருக்குள் வருவதால் மாலை வேளையில்  உஷ்ணம் சற்று குறைவாக காணப்படுகிறது. 


அதே சமயம், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய நிலையில்  நேற்று  புதுச்சேரியில் 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.


தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் நடைபெற்று வருவதால் இந்த காலக்கட்டத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக தான் இருக்கும். ஆனால் மே மாதம் தொடக்கத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் காரணமாக நல்ல மழை பதிவு இருந்தது. வெப்பநிலையும் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருந்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


19YearsOf Ayutha ezhuthu: 19 ஆண்டுகள்: ரசிகர்களால் கொண்டாடப்படாத காவியம் ஆயுத எழுத்து!


”நான் நட்டாவின் உதவியாளர்! அமைச்சர் பதவி வேணுமா?” - 28 எம்எல்ஏக்களுக்கு பறந்த போன் கால்... வசமாக சிக்கிய மோசடி மன்னன்!