சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் தற்போது குளிர்ந்த கால நிலை நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பகலில் வெப்பமான சூழல் நிலவிய போதிலும், மாலை நேரத்தில் மேக கூட்டங்கள் சேர்ந்து இதமான வானிலை நிலவியது. இதுமட்டுமின்றி கடந்த இரண்டு நாட்களாக இரவில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.


IPL 2023, DC vs CSK LIVE: அதிரடி ஆட்டத்தில் சென்னை; விக்கெட்டுக்கு விழிபிதுங்கும் டெல்லி..!




இதனால் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, குணா குகை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே மலர் கண்காட்சிக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பல்லாயிரக்கணக்கான பல வண்ண பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. அழகிய தோற்றங்களுடன் காட்சியளிக்கும் இந்த பூக்கள் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்து வருகிறது.


TN Rain Alert: இன்றும் நாளையும் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம் இதுதான்..




பூக்களை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் அதன் முன்பு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இதேபோல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக, நகர்ப்பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானல் ஏரிச்சாலையில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.


மீண்டும் 1000 ரூபாய் நோட்டு அறிமுகமா?...அடித்து சொல்லும் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்..!




சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பின. ஹோம் ஸ்டே எனப்படும் தனியார் தங்கும் வீடுகளில் தங்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதேபோல் கிராம பகுதியில் கூடாரங்களிலும், பலூன் இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் தங்கி வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் நகர் மற்றும் கிராம பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண