முல்லைப்பெரியாறு அணையில் போதியளவு நீரிருப்பு இல்லாததால் தந்தை பெரியார் பிடிஆர் மற்றும் பதினெட்டாம் கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை என ஆட்சியரிடம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்த பின்  தங்கதமிழ்செல்வன் பேட்டியளித்துள்ளார்.


EXCLUSIVE: மருத்துவப் பணியாளர் தேர்வு முடிவிலும் தாமதம்: காத்திருந்து நொந்து போகும் எம்ஆர்பி தேர்வர்கள்!




திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர்  முல்லைப்பெரியாற்றில் இருந்து பதினெட்டாம் கால்வாய் மற்றும் தந்தை பெரியார் பிடிஆர் ஆகிய 3 கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்கதமிழ்செல்வன் கூறுகையில், ”முல்லைப்பெரியாறு அணையில் 16,962 மில்லியன் கன அடி நீர் இருந்தால் தான் பதினெட்டாம் கால்வாய், தந்தை பெரியார் மற்றும் பிடிஆர் கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க முடியும் என தமிழ்நாடு அரசாணை இருக்கிறது.


Fire Accident: மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் தீ விபத்து: விண்ணை முட்டும் கரும்புகை...சென்னையில் பரபரப்பு!




ஆனால் தற்போது அணையில் 8,592மில்லியன் கனஅடி நீரிருப்பு தான் இருக்கிறது. இதன் காரணமாக தான் சம்பந்தப்பட்ட கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை என ஆட்சியர் கூறினார். மேலும் மேலூர் பகுதியில் உள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் முடியவில்லை, இதனால்  அங்குள்ள விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே முன்னுரிமை அடிப்படையில் இரு போக பாசன நிலங்களுக்கு தண்ணீர் கொடுத்த பிறகு தான் மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும்.


IND (W) vs ENG (W) Test: இங்கிலாந்து அணியை ஓட விட்ட இந்திய பெண்கள் அணி - டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி..!


எதிர்க்கட்சியினர் உண்மை நிலவரம் அறிந்து கொள்ள வேண்டும். வேண்டுமென்றே மக்களை திசை திருப்பும் வகையில் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் கண்டிப்பாக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும். அணையில் நீர் வைத்துக்கொண்டு பாசனத்திற்கு தண்ணீர் தராமல் அதனை கடலில் கலக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு கிடையாது” என்று கூறினார் .