மதுரையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை கைது செய்த காவல்துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற போது பாலத்தில் இருந்து குதித்து கால் முறிவு - மருத்துவமனையில் அனுமதி.


இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர்  லோகநாதன் பாராட்டு தெரிவித்தார்.


படுகொலை


மதுரை மாநகர் தத்தனேரி பாக்கியநாதபுரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் - (32 வயது ) கடந்த 8- ம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் இருந்தவரை மர்மநபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதில் வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருஞானசம்பந்தம், சூர்யா உள்ளிட்ட 9 பேரை செல்லூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி வினோத் குமாரை ( 25 - வயது ) பிடிக்க செல்லூர் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.


- Chennai Super Kings: ரோகித்தை தூக்கி விட்டு பாண்ட்யாவை கேப்டனாக்கிய மும்பை.. சென்னை அணிக்கு அடித்த லக்..!




எலும்பு முறிவு


இந்நிலையில் நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தில் பதுங்கியிருந்த வினோத்குமாரை தனிப்படை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். பின்னர் மதுரைக்கு விசாரணைக்காக அழைத்துவந்து விசாரணை நடத்திகொண்டிருந்தபோது அருள்தாஸ்புரம் களத்துபொட்டல் வயல் பகுதியில் மறைத்து வைத்திருந்த ரத்தக்கரை படிந்த 2 கத்திகளை கைப்பற்றினார்கள் அப்போது ரவுடி வினோத்குமார் காவல்துறையினரிடம் தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு அவரால் ஓட முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் விரைந்து சென்று அவரை பிடித்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றுவருகிறார்.




காவல்துறைக்கு பாராட்டு


கைது செய்யப்பட்ட ரவுடி வினோத்குமார் மீது கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கடந்த 8- ம் தேதியன்று நடைபெற்ற கொலை சம்பவத்தன்று கஞ்சா வழக்கில் சிறையில் வெளி வந்த நிலையில் அன்றே கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர்  லோகநாதன் பாராட்டு தெரிவித்தார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Southern Railway: ரயில் விபத்தை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது - மேலும் எத்தனை பேருக்கு விருது தெரியுமா..?


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Pariksha Pe Charcha: மாணவர்களின் தேர்வு பயம் போக்கும் பிரதமர் மோடி: பரிக்‌ஷா பே சார்ச்சா விண்ணப்பம் தொடக்கம்