Fire Accident: சென்னை அடுத்த மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம்:
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவு மிதந்து வருகிறது. அப்பகுதியில் இருக்கும் மீன்வர்களின் படகுகளில் கரிய பிசின் போல் இந்த எண்ணெய் ஒட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கொசஸ்தலை ஆறு என்பது மீன்கள் இனப்பெருக்கத்திற்கான முக்கிய ஆதாரம். எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கும் என மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆற்றில் எண்ணெய் திறந்துவிட்ட நிறுவனத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிபிசிஎல் நிறுவனத்தில் தீ விபத்து:
இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. எண்ணெய் கழிவுகளை விரைவாக அகற்ற தமிழக அரசுக்கும், சிபிசிஎல் நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இப்படியான நிலையில் தான், சபிசிஎல் நிறுவனத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
சென்னை அடுத்த மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்தால் வெளியேறி வரும் கரும்புகையால் அப்பகுதி முழுவதுமே இருள் சூழ்ந்தது போல் காட்சி அளிக்கிறது. சிபிசிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு கொசஸ்தலை ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்து பரப்பு அடங்குவதற்குள் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க
குஜராத்தில் உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம்: அப்படி என்னென்ன சிறப்புகள் தெரியுமா? வாயை பிளப்பீங்க!