அரசு மருத்துவமனைகளில் விசாகா கமிட்டி பெயரளவில் மட்டுமே உள்ளது. ஆனால் எந்த செயல்பாடும் இல்லை - தமிழ்நாடு MRB மேம்பாடு செவிலியர் சங்க இணைசெயலாளர் சுஜாதா குற்றச்சாட்டு. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் செவிலியர்கள் அரசுக்கு எச்சரிக்கை.

 

தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

 

திமுக அரசு தேர்தல் காலத்தில் செவிலியர்களுக்காக அறிவித்த தேர்தல் வாக்குறுதியான அரசு மருத்துவமனைகளில் பல ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில பணிபுரிந்துவரும் MRB செவிலியர்களுக்கு பணிநிரந்தம் செய்ய வேண்டும், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள 1500 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு மருத்துவமனைகளில்  மகப்பேறு சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசாக கமிட்டியின் செயல்பாடுகளை உறுதிபடுத்த வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி மேம்பாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமான அரசு மருத்துவமனை செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

 


 


1500 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் 


 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில இணைச்செயலாளர் சுஜாதா...,” திமுக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியான எம்.ஆர்.பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் ஏராளமான அரசு மருத்துவமனைகள் உருவாகியுள்ளது. கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன, உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன, ஆனால் செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பவில்லை. தமிழகத்தில் உள்ள 1500 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஏற்கனவே போராடிப் பெற்ற சலுகையான மகப்பேறு  சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர்களுக்கு விடுப்புடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். தமிழக அரசு போராடி பெற்ற உரிமையை கூட இழக்க வைக்கிறது எனவும், எங்களது 15 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் அடுத்தடுத்த போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றார்.

 

விசாகா கமிட்டி குறித்த கேள்விக்கு ?

 

அரசு அரசு மருத்துவமனைகளில் உள்ள விசாகா கமிட்டி என்பது பெயரளவிற்கே உள்ளது. கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நடைபெற்ற சம்பவத்தின் பின்னரும் , செவிலியர்களுக்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு உள்ள நிலையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கிறது. ஆனாலும் விசாக கமிட்டியின் செயல்பாடுகள் உறுதியானதாக இல்லை தொய்வானதாக இருக்கிறது. எனவே, அதனை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Chennai Red Alert: 4 நாட்களுக்கு Work From Home: நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவு!