திமுகவின் மூன்றரை வருட ஆட்சி முழுக்க முழுக்க வேதனையான ஆட்சி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மதுரையில் பேட்டியளித்தார்.

 

பாஜக உறுப்பினர் சேர்க்கையில் எல்.முருகன்

 

பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் மதுரை வண்டியூர் சௌராஷ்ட்ரா புரம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு புதிதாக பாஜகவில் இணைந்த நபர்களுக்கு பாஜக உறுப்பினர் அட்டையை எல்.முருகன் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது...,” மக்கள் பேராதரவோடு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 15ம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். ஜனநாயக முறையில் பாஜகவில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. 11கோடி இலக்கு வைத்து உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. வேறு எந்த கட்சியிலும் இப்படி ஜனநாயக முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதில்லை.

 

ரயில்வே துறை சிற்பாக செயல்படுகிறது

 

தமிழகத்தில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கருத்தை மத்திய அரசுக்கு எதிராக இரயில் விபத்தில் பரப்பி வருகின்றனர். திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திட்டமிட்டு இதனை செய்து வருகின்றனர். மெரீனாவில் 5 பேர் உயிரிழந்தார்கள். அதுபற்றி திமுக கூட்டணி கட்சிகள் பேசினார்களா? மெரீனா சம்பவத்தை மறைக்க திமுக ரயில் விபத்தில் நாடகமாடி கொண்டுள்ளனர். ரயில்வே துறை 10 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புல்லட் ரயில்  இன்னும் ஒரு வருடத்தில் வர உள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சியில் ரயில் நிலையங்களுக்கு சென்றால்  ஏன் வந்தோம் என இருக்கும். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. ரயில் நிலையங்கள் சிறப்பாக உள்ளது. ரயில் விபத்து குறித்து என்ஐஏ விசாரித்து கொண்டு உள்ளனர். ஆனால் மொத்த ரயில்வேயும் வேலை செய்யவில்லை என திமுக இந்தியா கூட்டணி ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டுள்ளனர். மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த போது என்ன நடவடிக்கை எடுத்தார்களா? அப்போது மெட்ரோ ரயில், பேருந்து வசதிகள் சரிவர  செய்து கொடுக்கவில்லை. தண்ணீர், ஆம்புலன்ஸ் இல்லாமல் 5 பேர் இறந்தார்கள்.ரயில் விபத்து குறித்து நாம் ஒரு தனி விசாரணையை நடத்த தேவையில்லை. என்ஐஏ ரயில்வே விசாரித்து உண்மையை அவர்கள் கொண்டு வருவார்கள்” என்றார்.

 

நடிகர் விஜய் கட்சி மாநாடு குறித்த கேள்விக்கு,

 

விஜய் 27ம் தேதி மாநாடு நடத்துகிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அவருடைய செயல்பாடு கொள்கைகளை பொறுத்து தான் மக்கள் முடிவெடுப்பார்கள். நடிகர் நடிகை என பிரித்து பார்க்க விரும்பவில்லை.  விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லாதது ஏன் என மக்கள் கேள்வி கேட்டார்கள். நாங்களும் கேள்வி கேட்டோம். அதனால் அவர் விஜயதசமி ஆயுதபூஜைக்கு வாழ்த்து சொல்லியிருப்பார்.