தேனி மாவட்டம் போடி பகுதியில் புஷ்பா படம் பணியில் ஆற்று வெள்ளத்தில் கடத்தப்பட்ட 300 கிலோ  கருங்காலி மரக்கட்டைகள் பறிமுதல். 5 பேர் கைது செய்து வனத்துறையினர் ரகசிய விசாரனை செய்து வருகின்றனர்.




தேனி மாவட்டம் இயற்கை வளங்களான காடுகளும் ,வயல்களும், மலைப் பகுதிகளும் நிறைந்த பகுதியாகும். மலைப்பகுதிகளில் விளையும் விலை உயர்ந்த தேக்கு , சந்தனம், கருங்காலி, நெல்லி ,வாலா ,உசுலு உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மரங்கள் வளமுடன் உள்ளன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காடுகளிலும், வனப் பகுதியிலும் உள்ள கருங்காலி மரங்களை வெட்டி சாய்த்து வைரம் வாய்ந்த பகுதியை மட்டும் செதுக்கி குரங்கனி - கொட்டகுடிமலை கிராமத்தைச்  சேர்ந்த மூன்று நபர்களும்,வத்தலகுண்டு சேர்ந்த இரண்டு நபர்களும், பல நாட்களாக கடத்தி விற்பனை செய்து வந்துள்ளனர்.


”பயப்பட வேண்டாம்”: சென்னையில் எந்த நேரத்தில் மழை பெய்யும்: துல்லியமாக விளக்கிய வானிலை மைய இயக்குநர்




புஷ்பா திரைப்படம் பாணியில் - ஆற்று வெள்ளத்தின் வெட்டிய மரங்களை தூக்கி எரிந்து வெள்ளப் போக்கில் கடத்தி வரப்பட்டு போடி பகுதியில் வெட்டிய மரங்களை ஆட்டோ மூலம் கொண்டு செல்லப்பட்டு சென்னையில் விற்பனை செய்ய முயன்ற போது நுண்ணறிவு போலீஸ் சுமார் 400 கிலோ எடை கொண்ட கருங்காலி மரத்தை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் ஐந்து பேரை கைது செய்து போடி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


வேளச்சேரி மக்கள் உஷார் தான் போல.. விழுந்த அடி அப்படி.. பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள் - காரணம் என்ன?




Schools Colleges Holiday: அதி கனமழை எச்சரிக்கை; சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு


இது சம்பந்தமாக போடி வனத்துறை அதிகாரிகள் வெட்டப்பட்ட இடம் கடத்திவரப்பட்ட இடங்கள் எங்கிருந்து ஆற்றில் கடத்த ஆற்று வெள்ளத்தில் கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்து வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களை ரகசிய விசாரணைக்காக வைத்துள்ளனர். தொடர்ந்து தேனி மாவட்டத்தின் கஞ்சா , அபின், புகையிலை , மது பாட்டில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் சம்பவங்களை தொடர்ந்து  வரும் நிலையில் தற்போது கருங்காலிக் கட்டை, சந்தன கட்டை கடத்தல் கும்பல் அதிகரித்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடத்தல் கும்பலை ஒட்டுமொத்தமாக கைது செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.